IPL 2024 | Mumbai Indians | Hardik Pandya | Rohit Sharma | GT vs MI: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 169 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோகித் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் மும்பை அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிகட்டத்தில் மும்பை அணி ஒருசில விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது. கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இருக்க, அந்த ஓவரை உமேஷ் யாதவ் கச்சிதமாக வீசினார்.
உமேஷ் யாதவின் ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஹர்திக், 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3வது பந்தை சிக்சருக்காக தூக்கி அடித்த பாண்ட்யா, பவுண்டரிக்கு அருகே கேட்ச்சாகி அவுட்டானார்.இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.
புதிய சர்ச்சை
இந்நிலையில், எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறும் ஐ.பி.எல் தொடரில், மும்பை - குஜராத் அணிகள் மோதிய ஆட்டத்தில் புதிய சர்ச்சை வெடித்தது. மும்பை அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மா நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கும் அணியில் இருக்கும் மூத்த வீரர்களுக்கும் இடையே மோதல் போக்கும் நிலவும் என பரவலாக பேசப்பட்டது. அவ்வகையில், நேற்றைய போட்டியின் போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தப் போட்டியில் ரோகித்தை அவர் பீல்டிங் செய்யும் 30 யார்டு வட்டத்தை விட்டு வெளியேற்றினார் ஹர்திக். ரோகித்தை நோக்கி கையை காட்டிய ஹர்திக் பவுண்டரி கோட்டிற்கு அருகே பீல்டிங் செய்யச் சொன்னார். கேப்டன் கூறிவிட்டதால் ரோகித் பீல்டிங் செய்ய அந்த இடத்துக்கு வேகமாக ஓடினார். பவுண்டரி கோட்டிற்கு சென்ற பிறகு இங்கேயும் அங்கேயுமாக ரோகித்தை அலைக்கழித்தார் ஹர்திக். ரோகித் முகம் சுளிக்காமல் சிரித்துக் கொண்டே அந்த இடத்திற்கு நகர்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
Hardik Pandya sent Rohit Sharma to boundary line
— Krish Na (@iamsai494) March 24, 2024
After a long time I saw Rohit Sharma fielding at the boundary line #MIvsGT #GTvMI #IPL2024 pic.twitter.com/Oe4wdAt1hU
இதனிடையே, போட்டி முடிந்ததும், ரோகித் சர்மாவை பின்புறம் இருந்தவாறு ஹர்திக் கட்டிப்பிடித்தார். அப்போது, அவரை தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரோகித். களத்தில் நீண்ட நேரம் நடந்த இந்த விவாதத்தில் ரோகித் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாமல் சென்றார் ஹர்திக். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
பிளவு?
இந்த நிலையில், தற்போது, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் தீவிரமாக ஆலோசிக்கும் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த வீரர்கள் எதையோப் பற்றி பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். ஒருவேளை, மும்பை அணி வீரர்களுக்குள் பிளவு ஏற்பட்டு விட்டதோ என்று ரசிகர்கள் ஊகித்து வருகிறார்கள்.
More mischief https://t.co/nfL1djJK5o pic.twitter.com/5CdrXoFuBe
— Vishal Misra (@vishalmisra) March 24, 2024
Rohit Sharma to bumrah and others - Ye hardik ne Kishan ko apni side mila liya h 😭#TATAIPL #RohitSharma #JaspritBumrah #HardikPandya pic.twitter.com/UU4xGPDzut
— Devendra Dongre 🇮🇳 (@Devendra786s) March 25, 2024
Good to see Bumrah is team Ro
— Big Bharadwaj Bhai 🇮🇳/acc (@Sammith130) March 24, 2024
What’s cooking there. MI rigged
— sudhanshu' (@whoshud) March 25, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.