Advertisment

புரட்டி எடுத்த ராஜஸ்தான்... மும்பையின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி இருக்கு?

நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை அணி 3 வெற்றி, 5 தோல்வி என தள்ளாடி வருகிறது. அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய அவர்கள் மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

author-image
WebDesk
New Update
Mumbai Indians Playoff Hopes after Big Loss vs Rajasthan Royals IPL 2024 Points Table Tamil News

ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய மும்பை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் அதே 7-வது இடத்தில் உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Mumbai Indians | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை ஜெய்பூரில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 180 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதம் மூலம் 18.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் மிரட்டல் அடி அடித்த ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

மும்பை பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி? 

ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது. தோல்வியைத் தழுவிய மும்பை அணி 6 புள்ளிகளுடன் அதே 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் -0.227 ஆக உள்ளது. 

நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை அணி 3 வெற்றி, 5 தோல்வி என தள்ளாடி வருகிறது. அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய அவர்கள் மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். தோற்கும் பட்சத்தில், மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே பிளே-ஆஃப் வாய்ப்பு இருக்கும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai Indians Rajasthan Royals IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment