10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏலத்திற்கு முன் அனைத்து 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் மற்றும் கழற்றி விட இருக்கும் வீரர்கள் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ கூறியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Mumbai Indians likely to retain Rohit Sharma; LSG yet to take a call on KL Rahul
பி.சி.சி.ஐ-யின் புதிய விதிமுறைகளின் படி, ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். ஐந்து கேப்டு வீரர்கள் (இந்தியா/வெளிநாடு) இருக்கலாம். அதிகபட்சமாக இரண்டு அன்கேப்ட் வீரர்கள் இடம் பெறலாம். விதிமுறைகளின்படி, முதல் வீரருக்கு ரூ.18 கோடியும், இரண்டாவது வீரருக்கு ரூ.14 கோடியும், மூன்றாவது வீரருக்கு ரூ.11 கோடியும், நான்காவது மற்றும் ஐந்தாவது வீரர்களுக்கு முறையே ரூ.18 கோடியும், ரூ.14 கோடியும் தக்கவைக்க ஒரு செலவிட வேண்டும். கூடுதலாக, ஒரு அணி ஒரு கேப்டு வீரரைத் தக்க வைத்துக் கொள்ளலாம் மற்றும் போட்டிக்கான உரிமையை (ஆர்.டி.எம்) கைவிடலாம். ஆனால் அவர்கள் 5 ஐ மட்டுமே வைத்திருந்தால், அவர்கள் ஆர்.டி.எம் விருப்பத்தை வைத்திருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எந்தெந்த வீரர்களை தக்க வைப்பது? யார் யாரை விடுவிப்பது என்பது தொடர்கள் அணியின் உரிமையாளர்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில், ஐ.பி.எல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்க இருக்கு 4 இந்திய வீரர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்க வைக்கவிருக்கிறது. கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுடன் தொடர இருக்கிறது.
ரோகித்தை தக்க வைக்கும் மும்பை?
2023 சீசன் வரை மும்பையின் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்து வந்த நிலையில், கடந்த சீசனில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என மும்பை நிர்வாகம் அறிவித்தது. கேப்டனை மாற்றியதன் விளைவாக மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 14 ஆட்டங்களில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்தது.
அன்கேப்ட் வீரரை தக்கவைத்தால் ரூ.4 கோடி செலவு
மும்பை அணி ஹர்திக், ரோகித், சூரியகுமார், பும்ரா ஆகிய வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டால், அந்த அணியின் மொத்த தொகை ரூ.120 கோடியில் இருந்து ரூ.61 கோடியை செலவிட நேரிடும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ஏலத்தில் வாங்குவதையும், டிம் டேவிட்டிற்கு ஆர்டிஎம்-ஐ பயன்படுத்துவதையும் மும்பை அணி நோக்கமாகக் கொண்துள்ளாதாகத் தெரிகிறது.
3 வீரர்களை தக்கவைக்கும் ஆர்.ஆர்
இதற்கிடையில், கேப்டன் சஞ்சு சாம்சன், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரியான் பராக் ஆகிய மூன்று இந்திய வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைக்க முடிவு செய்துள்ளது. அந்த அணி தற்போது இங்கிலாந்தின் ஜோஸ் பட்லருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பூரனை தக்க வைக்கும் லக்னோ
லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அதன் இரண்டு அன்கேப்ட் வீரர்களான ஆயுஷ் படோனி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிக்-ஹிட்டர் நிக்கோலஸ் பூரனையும் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், அணியில் கேப்டன் கே.எல் ராகுலை தக்க வைப்பது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்து கொள்கிறது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல் ராகுலை கடுமையாக பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியது.
எனினும், ஆகஸ்ட் மாதம் லக்னோ அணியின் புதிய வழிகாட்டியாக ஜாகீர் கான் பெயரிடப்பட்ட விழாவில், “அவர் (ராகுல்) லக்னோ அணியில் ஒருங்கிணைந்தவராக இருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே இங்குதான் இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கும் (என் மகன்) ஷஷ்வத்துக்கும் அவர் குடும்பத்தைப் போன்றவர்." என்று லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியிருந்தார்.
பண்ட், அக்சர், குல்தீப்பை தக்கவைக்கும் டெல்லி
விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ரிஷப் பண்ட், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் மற்றும் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகிய 3 வீரர்களை டெல்லி கேப்பிடல்ஸ் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இன்னும் ஐ.பி.எல் பட்டத்தை வெல்லாத அந்த அணியின் புதிய பயிற்சியாளராக ஹேமாங் பதானி இணைந்துள்ளார். முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.
அர்ஷ்தீப்பை தக்கவைக்கும் பஞ்சாப்
வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை தங்களது அணியில் தக்கவைக்க பஞ்சாப் கிங்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் ஷர்மா ஆகிய இரண்டு அன்கேப்ட் வீரர்களைத் தக்கவைக்க அந்த அணி விரும்புகிறது. அவர்கள் இருவரும் கடந்த சீசனில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டிகளில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.