Mumbai Indians vs Rajasthan Royals: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.20) மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்…
19.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிப் பெற்றது.
இப்போ தான் சஞ்சு-வின் அபார ஆட்டம் பற்றி நாம புகழ்ந்து சொன்னோம். அதற்குள், ராகுல் சாஹர் ஓவரில், இறங்கி சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, ஸ்ட்ரெய்ட்டில் 35 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, அதே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 0 ரன்னில் போல்ட் ஆனார்.
ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே, சஞ்சு சாம்சன் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும், ரஹானே 12 ரன்களில் வெளியேறினார். இருப்பினும், சஞ்சு சாம்சன் அருமையான ‘டச்’ கொண்டு ஆடி வருகிறார். அதிலும், ஸ்பின்னுக்கு எதிரான இவரது ஆட்டம், வாவ் ரகத்தில் உள்ளது.
6 ஓவர்கள் முடிவில் 60-1
20 ஓவர்கள் முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டி காக் 65 ரன்கள் எடுத்தார். அவர் 5 ரன் எடுத்திருந்த போது கொடுத்த எளிதான கேட்சை ஜோஃப்ரா ஆர்ச்சர் தவறவிட்டார். அதுமட்டுமின்றி, பாண்ட்யா கொடுத்த 2 கேட்சுகளையும் அவர் வீணடித்தார். ஆனால், பவுலிங்கில் அசத்திய ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.
களத்தில் ஹர்திக் பாண்ட்யா.. பொல்லார்ட். 16வது ஓவரை வீசிய ஆர்ச்சர். அடித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா?
வெறும் 2
மாஸ்!!
12 ஓவர்கள் முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. களத்தை நான்காக ரீட் செய்த டி காக், பீ காக் போல தோகை விரித்து அரைசதம் அடித்து ஆடி வருகிறார்.
மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு பேட்ஸ்மேனாக இந்த சீசன் ஒரு பாகற்காய் ஃபீலிங் தான். இந்தப் போட்டியிலும், 5 ரன்களில் ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, மனதிற்குள் வேர்ல்டு கப் பீதிகள்!!
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்தார். ஜெர்க் ஆகாதீங்க… ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கப்பட்டு, ஸ்மித் கேப்டனாக்கப்பட்டு இருக்கிறார்.
கிரிக்கெட்ல இதுலாம் சாதாரணமப்பா!!