Advertisment

மும்பை இந்தியன்ஸ் வெற்றி! 7வது தோல்வியை சந்தித்த கோலி!

MI vs RCB 2019 Match: மும்பை வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
RCB vs MI Live Score, IPL 2019 RCB vs MI Live Score

RCB vs MI Live Score, IPL 2019 RCB vs MI Live Score

Mumbai Indians vs Royal Challengers Bangalore: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.15) இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்றது. அதேசமயம், 8வது போட்டியில் ஆடிய பெங்களூரு, தனது 7வது தோல்வியை பதிவு செய்தது.

Advertisment

மேலும் படிக்க - World Cup India Team 2019: உலகக் கோப்பை அணி 15 வீரர்கள் அறிவிப்பு, தமிழக வீரர்கள் 2 பேருக்கு இடம்

Live Blog

IPL 2019: MI vs RCB














Highlights

    23:39 (IST)15 Apr 2019

    மும்பை இந்தியன்ஸ் வெற்றி

    19வது ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவன் நெகி அந்த ஓவரை வீசிய, ஹர்திக் பாண்ட்யா அதே ஓவரில் 22 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணிக்கு மற்றுமொரு மோசமான தோல்வி.

    23:31 (IST)15 Apr 2019

    க்ருனால் பாண்ட்யா அவுட்

    ரெண்டு பாண்டியாசும் போயிருக்க வேண்டியது. போன ஓவரிலே ஹர்திக் கொடுத்த சற்று கடினமான கேட்சை டிம் சவுதி கோட்டைவிட, தற்போது சிராஜ் ஓவரில், க்ருனால் பாண்ட்யா 11 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    23:26 (IST)15 Apr 2019

    நெஹ்ராவை காட்டியாச்சு... மேட்ச் ஓவர்

    ஏண்டா இப்போ நெஹ்ராவை காட்டுனீங்க?.. இந்த சீசன் முழுசா, அவரை கேமராவில் ஃபோகஸ் செய்த அனைத்திலும் ஆர்சிபி தோற்றுவிட்டது. பஞ்சாப்புக்கு எதிரான போன மேட்சில் தான் அவரைக் காட்டவில்லை... ஆர்சிபி வின்...

    இப்போ மீண்டும் நெஹ்ராவை காண்பித்து இருப்பதால், மும்பைக்கு வெற்றி என்பது இங்கு உறுதியாகிறது.

    23:16 (IST)15 Apr 2019

    சிக்கிட்டியே குமாரு!!

    எதிர்பார்த்தபடியே, சாஹல் ஓவரை இறங்கி ஆடிய சூர்யகுமார் யாதவ், லாங் ஆஃப்-ல் டிஸ்டன்ஸ் க்ளீயர் பண்ண முடியாமல், நவ்தீப் சைனியிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்களில் வெளியேறினார்.

    23:01 (IST)15 Apr 2019

    சாஹல் கை காலி...

    சாஹல் வீசிய பந்தில், 'இந்தியாவின் டி வில்லியர்ஸ்' சூர்யகுமார் யாதவ்  ஸ்ட்ரெய்ட்டில் அடிக்க, அதை தடுக்க முற்பட்ட போது, சாஹலின் விரல்களை பந்து பதம் பார்த்தது. 

    பாத்துப்பா.. வேர்ல்டு கப் டீம் மெம்பர் பா... காலி பண்ணிடாதீங்க

    22:59 (IST)15 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    இந்தப் போட்டியில் யார் ஜெயிக்கப் போறாங்கனு நான் சொல்லித் தான் தெரியனுமா?

    யெஸ்... மும்பையே தான்.

    மும்பை இந்தியன்ஸ் - 98%

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2%

    22:51 (IST)15 Apr 2019

    இஷான் கிஷன் அவுட்

    ஸ்பின்னர்களை தெற்கு மூலையில் சாத்திக் கொண்டிருந்த இஷான் கிஷன் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து, சாஹல் ஓவரில் ஸ்டெம்பிங் ஆனார். 

    ஆனால், வெற்றி என்னமோ மும்பை பக்கமே இருப்பது போன்று தெரிகிறது... 

    22:50 (IST)15 Apr 2019

    97-2

    10 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை 97 ரன்கள் எடுத்துள்ளது.

    22:14 (IST)15 Apr 2019

    4,0,4,6,0,2

    உமேஷ் வீசிய 3வது ஓவரில், டி காக் விளாசிய ரன்கள் இது. இப்படி இருந்தா அப்புறம் எப்படி ஜெயிக்குறது?

    22:08 (IST)15 Apr 2019

    ஆரம்பமே அதிரடி

    மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும், டி காக்கும் களத்தில்... உமேஷ் யாதவ் ஓவரில் டி காக் இரண்டு பவுண்டரிகளை தட்டிவிட, சைனி ஓவரில் ரோஹித் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். 

    21:44 (IST)15 Apr 2019

    172 ரன்கள் இலக்கு

    20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

    21:26 (IST)15 Apr 2019

    மொயீன் அலி அவுட்

    மலிங்காவின் ஒரு ஸ்லோ பந்தில், அரைசதம் அடித்து செட்டில்ட் ஆகியிருந்த மொயீன் அலி 50 ரன்களில் ஹர்திக் பாண்ட்யாவிடம் லெக் சைடில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    இனி மிஸ்டர் 360 டிகிரி உபயம்

    21:17 (IST)15 Apr 2019

    136-2

    16 ஓவர்கள் முடிவில், பெங்களூரு 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. டி வில்லியர்ஸ், மொயீன் அலி களத்தில்....

    20:55 (IST)15 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    பெங்களூரு அணி தட்டுத் தடுமாறி ஆடி வருவதைப் பார்த்தால், 160-175 வரை அடிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த ஸ்கோர் நிச்சயம் போதாது. குறைந்த பட்சம் 185 நிர்ணயிக்க வேண்டும் என்பது விதி.

    20:38 (IST)15 Apr 2019

    பட்டு அவுட்

    டி வில்லியர்ஸ் பம்மிக் கொண்டிருக்க, கதகளி ஆடிக் கொண்டிருந்த பார்த்திவ் படேல், ஹர்திக் பாண்ட்யாவின் ஸ்லோ பந்தில், பாயிண்ட்டில் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் வெளியேறினார். 

    ஏய் பி டி.... இனி உன் கையில் தான் ஆட்டம்... இந்தா பிடி

    20:30 (IST)15 Apr 2019

    நம்ம பட்டுவா இது?

    4,0,6,4,4,1.

    விராட் கோலியை நாசூக்காக காலியா செய்த ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஓவரில் நம்ம பார்த்திவ் படேல் அடித்த ரன்கள் இவை. 

    நம்ப முடிகிறதா?

    பட்டூ கிட்ட வச்சுக்கிட்டா கொட்டு!!

    20:14 (IST)15 Apr 2019

    தளபதி அவுட்... ஓ காட்...

    ஜேசன் வீசிய குட் லென்த் பந்தில், இன்சைட் எட்ஜ் ஆன விராட் கோலி, 8 ரன்களில் வெளியேறினார் இந்திய கேப்டன் விராட் கோலி..

    சாரி ஃபார் விராட்டியன்ஸ்...

    19:59 (IST)15 Apr 2019

    களத்தில் பெங்களூரு...

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஓப்பனர்ஸ் விராட் கோலி மற்றும் பட பட பார்த்திவ் படேல் களமிறங்கி உள்ளனர். 

    மறுபடியும் மலிங்காவா...! நோ - பால் ஏதும் போட்டுறாதா ராசா!!

    19:36 (IST)15 Apr 2019

    பெங்களூரு பேட்டிங்

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மும்பை அணியில், அல்சாரி ஜோசப்புக்கு பதிலாக மலிங்கா மீண்டும் திரும்பியுள்ளார்.

    19:07 (IST)15 Apr 2019

    மும்பை ஆதிக்கத்துக்கு எண்ட் கார்டு போடுமா?

    மும்பையும், பெங்களூரும் மோதிய கடைசி 7 ஆட்டங்களில் 6ல் மும்பையே வெற்றிப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, இந்த 7 ஆட்டங்களில் வான்கடேவில் நடைபெற்ற 3 போட்டியிலும் மும்பையே வென்றுள்ளது.

    18:31 (IST)15 Apr 2019

    என்ன திருப்பி கொடுத்திடுவோமா?

    அப்படீன்னு நாங்க கேட்கலீங்கோ... விராட்டியன்ஸ் கேட்குறாங்க.. யெஸ்... பெங்களூரு vs மும்பை, அதாவது ரோஹித் vs கோலி. அதுவும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில்... வெற்றிப் பெறப் போவது யார்? போட்டியின் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் வழங்க காத்திருக்கிறது ஐஇ தமிழ்....

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment