Advertisment

முரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடி நீக்கம்! மாயங்க் அகர்வாலுக்கு மெகா வாய்ப்பு

கர்நாடகாவைச் சேர்ந்த மாயங்க் அகர்வால், 295வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டராக நாளை அறிமுகம் செய்யப்படுகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Murali Vijay, lokesh rahul axed 3rd test vs australia melbourne - மெல்போர்ன் டெஸ்ட் போட்டி: முரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடி நீக்கம்

Murali Vijay, lokesh rahul axed 3rd test vs australia melbourne - மெல்போர்ன் டெஸ்ட் போட்டி: முரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடி நீக்கம்

நாளை (டிச.26) தொடங்கவுள்ள இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை 'பாக்ஸிங் டே' டெஸ்ட் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 1-1 என சமனில் இருக்கும் இந்த டெஸ்ட் தொடரில், மெல்போர்ன் போட்டியை வெல்லும் அணிக்கே தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு என்பதால், இரு அணிகளும் வெற்றியை குறி வைத்திருக்கின்றன.

மேலும் படிக்க - மூன்றாவது டெஸ்ட் போட்டி: 16 வருட மெகா சாதனையை தகர்த்தெறிய காத்திருக்கும் கோலி

இந்த நிலையில், இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது. அதில், தொடர்ந்து சொதப்பி வந்த தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ராகுலுக்கு பதில் மாயங்க் அகர்வாலுக்கு முதன் முதலாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய அணியின் பிளேயிங் XI: விராட் கோலி (C), அஜின்க்யா ரஹானே, மாயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, சத்தீஸ்வர் புஜாரா, ரோஹித் ஷர்மா , ரிஷப் பண்ட்(wk), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி.  

கர்நாடகாவைச் சேர்ந்த மாயங்க் அகர்வால், 295வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டராக நாளை அறிமுகம் செய்யப்படுகிறார். உள்நாட்டில் பல சாதனைகளை குவித்து வைத்திருக்கும் அகர்வாலுக்கு, இந்திய அணியில் இடம் கிடைப்பது மட்டும், 'ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது போன்று' அரிதாகவே இருந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்காக, அதுவும் தொடக்க வீரராக, அதுவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர்களது மண்ணிலேயே களமிறங்கும் மெகா வாய்ப்பு மாயங்க் அகர்வாலுக்கு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க - 'தோனி ரிட்டர்ன்ஸ்'.... டி20 தொடரில் மீண்டும் இடம் பிடித்த தோனி

ஆனால், மாயங்க் அகர்வாலுடன் ஓப்பனிங் இறங்கப் போவது யார்? என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. 'மாயங்க் அகர்வாலுடன் ஹனுமா விஹாரியை களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே ஆலோசனை தெரிவித்திருப்பதால், அவர் சொன்னதற்காகவே கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை ஓப்பனிங் இறக்க வாய்ப்புண்டு. இருப்பினும், யார் ஓப்பனர்கள்? என்பது இதுவரை இறுதியாகவில்லை.

India Vs Australia Bcci Murali Vijay Lokesh Rahul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment