Advertisment

வங்கதேச வன்முறை: ஷாகிப்-அல்-ஹசன் மீது கொலை வழக்கு பதிவு

ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் அடபோர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Murder case filed against Shakib Al Hasan during Bangladesh unrest Tamil News

வங்கதேசத்தின் முன்னாள் எம்.பி.ஆகவும் இருந்த ஷகிப் அல் ஹசன் தற்போது ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விளையாடி வருகிறார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் 30 சதவீத இடஒதுக்கீ்ட்டிற்கு எதிராக போராட்டம் வெடித்தது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

Advertisment

இதனையடுத்து ஏற்பட்ட நெருக்கடியால், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அதே நாளில், நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைத்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Murder case filed against Shakib-Al-Hasan during Bangladesh unrest

இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். அந்நாட்டின் முன்னாள் எம்.பி.ஆகவும் இருந்த ஷகிப் அல் ஹசன் தற்போது ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் அடபோர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் எப்போது வங்கதேசதிற்கு திரும்பினாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சியில் எம்.பி-யாக ஷகிப் அல் ஹசன் இருந்தார். ஷாகிப்பைத் தவிர, பிரதமர் ஷேக் ஹசீனா,  ரஃபிகுல் இஸ்லாம் மற்றும் கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்) 27-வது அல்லது 28-வது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ள ஷகிப், ஆகஸ்ட் 5 ஆம் தேதியோ அல்லது போராட்டத்தின் போதோ வங்கதேசத்தில் இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பித்தக்கது. அவர் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 9 வரை பிராம்ப்டனில் நடந்த குளோபல் டி 20 கனடா லீக்கில் பங்களா டைகர்ஸ் மிசிசாகாவிற்காக விளையாடினார். அதற்கு முன் அவர் ஜூலை நடுப்பகுதி வரை மேஜர் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்க அமெரிக்காவில் இருந்தார்.

'டெய்லி ஸ்டார்' செய்தியின்படி, முதல் தகவல் அறிக்கையில், "ஆகஸ்ட் 5 ஆம் தேதி அடபோர் பகுதியில் உள்ள ரிங் ரோட்டில் ரூபெல் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகார் அளித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரூபெல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்தார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஷேக் ஹசீனா அரசாங்கம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் கேப்டன் ஃபரூக் அகமது புதிய தலைவராக பதவியேற்றுள்ளார். கடந்த புதன்கிழமை பதவியில் இருந்த நஸ்முல் ஹசன் பாபோன் பதவி விலகினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Bangladesh Shakib Al Hasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment