இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய டி20 போட்டியில், வங்கதேச அணி, முதன்முறையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டிவென்டி 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி, டில்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மகமதுல்லா, பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 6 விக்கெட்கள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தது.
ஆரம்பித்த தோல்வி : வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிகுர் ரஹ்மான், களமிறங்கினார். போட்டியின் 10வது ஓவரை சஹல் வீசினார். இந்த ஓவரில், 3 முறை கேப்டன் ரோகித், கீப்பர் பண்ட்டின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், 3 டிஆர்எஸ் வாய்ப்புகள் தவறாக முடிந்தது.
3 முறை தப்பிய முஸ்பிகுர் : முஸ்பிகுர் ரஹ்மானுக்கு 2 முறை எல்பிடபிள்யூ ஆனது. அம்பயர் நாட் அவுட் என அறிவித்தார். அதற்கு டிஆர்எஸ் வாய்ப்புக்கு செல்லாமல், தேவையே இல்லாத அதுவும் ஒரே ஓவரில் 3 டிஆர்எஸ் வாய்ப்புகளை கேப்டன் ரோகித் பயன்படுத்தியது, வங்கதேச அணி வெற்றி பெற சாதகமாக அமைந்தது.
அதேபோல், 18வது ஓவரில் 16 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முஸ்பிகுர் அடிந்த பந்தை கேட்ச் பிடிக்க இந்திய அணியின் குருணால் பாண்ட்யா தவறியதால், வங்கதேச அணியின் வெற்றி உறுதியானது.
இந்திய அணியின் பொறுப்பற்ற செயல்கள், தவறான கணிப்புகளால், வங்கதேச அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்களின் கணிப்பற்ற நடவடிக்கைகளை துவம்சம் செய்த முஸ்பிகுர் ரஹ்மான் 60 ரன்களை கடந்ததோடு மட்டுமல்லாது, இந்திய அணிக்கு எதிரான முதல் வரலாற்று வெற்றியை பெற காரணமாக அமைந்தார்.
ஆட்ட நாயகன் விருது, முஸ்பிகுர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
மனம் திறந்த ரோகித் : இந்திய அணியின் இந்த தோல்விக்கு தவறான டிஆர்எஸ் அணுகல் தான் காரணம் என்பதை கேப்டன் ரோகித் சர்மா ஒப்புக்கொண்டார். வரும் போட்டிகளில் இத்தகைய போட்டிகளில் நடக்காதவாறு பார்த்துக்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டாவது டி20 போட்டி, நவம்பர் 7ம் தேதி, ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.