இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 2 முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ - BCCI), தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13 ஆம் தேதி அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு நேற்று திங்கள்கிழமையுடன் (மே 27) முடிவுற்றது.
இந்த நிலையில், பி.சி.சி.ஐ 3,000 -க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி போன்ற பிரபலங்களின் பெயரில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Narendra Modi, Amit Shah, Sachin Tendulkar, MS Dhoni: Fake India coach applicants use famous names
கூகுள் ஃபார்ம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதிகளவில் போலி விண்ணப்பங்கள் அனுப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலனவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலமானவவர்கள். இந்த நீண்ட பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி, ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களில் பல விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதனால், பெரும் குழப்பம் அடைந்துள்ள பி.சி.சி.ஐ அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இதில் தெளிவாக தெரியாதது என்னவென்றால், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வமுள்ள உண்மையான வேட்பாளர்களிடமிருந்து பி.சி.சி.ஐ ஏதேனும் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதா என்பதுதான்.
போலி விண்ணப்பதாரர்களை இந்திய வாரியம் சமாளிப்பது இது முதல் முறை அல்ல, இதனால் அவர்களை ஆய்வு செய்ய அதிக நேரம் செலவாகும். 2022 ஆம் ஆண்டில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பி.சி.சி.ஐ விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்போது, பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சுமார் 5,000 விண்ணப்பங்களைப் பெற்றனர். ஆர்வமுள்ள வேட்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்புமாறு பி.சி.சி.ஐ அப்போது கேட்டிருந்த நிலையில், இந்த முறை அது கூகுள் படிவங்களைப் பயன்படுத்தியது.
"கடந்த ஆண்டும், பி.சி.சி.ஐ இதுபோன்ற பதிலைப் பெற்றது, அப்போது விண்ணப்பித்தார்கள் தான் இந்த முறையும் விண்ணப்பித்துள்ளனர். பிசிசிஐ கூகுள் படிவங்களில் விண்ணப்பங்களை அழைக்க வேண்டியதன் காரணம், விண்ணப்பதாரர்களின் பெயர்களை ஒரே தாளில் ஆராய்வது எளிது,” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“