Natarajan twitter Salem natarajan : இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் போட்டித் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. முதலாவது இருபது போட்டியில் இந்திய அணி வெற்றபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய வென்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.
இப்போட்டியில், மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியபோது, நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதுபெற்ற ஹர்திக் பாண்டியா, இந்த விருதை நடராஜன் தான் பெறுவார் என நினைத்ததாக குறிப்பிட்டார்.நடராஜன் அறிமுகமான முதல் தொடரிலேயே, இந்திய அணி அத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் உலகில் பல தமிழக வீரர்கள் சிறப்பாக ஆடி உள்ளனர். தினேஷ் கார்த்திக், அஸ்வின், பாலாஜி என்று பல வீரர்கள் தங்கள் முத்திரையை பதித்து உள்ளனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் சரளாமாக இந்தி, ஆங்கிலம் தெரியும்.ஆனால் இவர்கள் பலரும் தமிழில் பேட்டி டுப்பது அரிது.
போட்டி முடிந்து மைதானத்தில் இருந்தபடியே சோனி தொலைக்காட்சி வர்ணனையாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரான முரளி கார்த்திக் (தமிழக வீரர்) நடராஜனை வீடியோ கான்பரன்சிங் மூலம் பேட்டி எடுத்தார். அப்போது இந்திய அணிக்கு நீங்கள் தேர்வானது குறித்தும் உங்களது மனநிலை குறித்தும் எங்களுக்கு தெளிவாக கூறுங்கள் என்று முரளி கார்த்திக் தமிழில் கேட்டுக்கொண்டார். பிறகு பேசிய நடராஜன் : ஆம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்திய நாட்டிற்காக முதல் சீரியஸில் வெற்றியுடன் இங்கு நிற்கிறேன். இந்த தருணத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நான் சந்தோஷத்தில் இருக்கிறேன்.
அதுமட்டுமின்றி நெட் பவுலராக இங்கு வந்தேன். ஆனால் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று என்னுடைய ஒட்டு மொத்த திறமையையும் இந்த தொடரில் வெளிப்படுத்தினேன். அதுமட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் அணி நிர்வாகத்தினர் எனக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அணி வீரர்கள் அனைவருமே எனக்கு ஊக்கம் அளித்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கமும், நிர்வாகத்தின் நம்பிக்கையும், ரசிகர்களின் ஆதரவும் என்னுடைய இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு காரணம்.