இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya). இந்த சீசன் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் கேப்டனாக வழிநடத்திய நிலையில், அவரது தலைமையிலான மும்பை அணி முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
ஹர்திக் - நடாஷா விவாகரத்து?
தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த சோதனையாக, அவரது மனைவி நடாஷா உடனான விவாகரத்து விவகாரம் பூதாகரமாகியுள்ளது. செர்பிய நாட்டு மாடலும், நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த 2020 மே 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதே ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி அகஸ்திய பாண்டியா என்கிற மகன் பிறந்தார். பாண்டியாவும் நடாசாவும் திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 2023 இல் உதய்பூரில் நடந்த விழாவில் தங்கள் திருமணத்தை புதுப்பித்துக் கொண்டனர்.
இந்நிலையில், ஹர்திக் மற்றும் அவரது மனைவி நடாஷா விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை அவ்வப்போது வெளியிடுவர். இது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகும்.
அண்மையில், ஹர்திக் மனைவி நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து "பாண்டியா" என்ற குடும்பப் பெயரை நீக்கியுள்ளார். கடந்த மாதம் அவரது பிறந்தநாளின்போது கூட, ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்களில் எந்த பதிவையும் வெளியிடவில்லை. மகன் அகஸ்தியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தவிர்த்து, ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டு பதிவிடப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைதள கணக்கிலிருந்து நடாஷா நீக்கியுள்ளதாக தெரிகிறது.
இதுபோன்ற காரணங்களால்தான், ஹர்திக் - நடாஷா தம்பதி பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், சமூக வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயர் நீக்கியது, ஐ.பி.எல். 2024 போட்டிகளின் போது நடாஷா மைதானத்திற்கு வராமல் இருந்தது, மற்றும் இருவர் தொடர்பான புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருப்பது போன்றவைகளால், அவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக பலரும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வைரல் வீடியோ
இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஸ்டான்கோவிச் இன்று (சனிக்கிழமை) மதியம் தனது நண்பர் அலெக்சாண்டர் அலெக்ஸ் இலிக் உடன் காபி குடிப்பதற்காக மும்பையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஓட்டலில் இருந்து வெளியே வந்த அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
அப்போது, அங்கு திரண்ட புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்கள் நடாசாவிடம் விவாகரத்து வதந்திகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு நடாசா எந்தக் கருத்தையும் தெரிவிக்கமால், "மிக்க நன்றி" என்று மட்டும் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, மாடல்-பிட்னஸ் பயிற்சியாளரான அலெக்சாண்டர் பாலிவுட் நடிகை திஷா பதானியுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவியது. இந்த நிலையில், அலெக்சாண்டர் ஹர்திக் பாண்டியா மனைவி நடாசா உடன் வலம் வருவதை பலரும் சந்தேகித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஜோடியாக காபி குடிப்பதற்காக ஓட்டலுக்கு சென்று திரும்பிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.