National Games 2022 medal tally Tamil News: 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 28 இந்திய மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் சேவைகள் (இந்திய ஆயுதப் படைகளின் அணிகள்) ஆகியவற்றிலிருந்து சுமார் 7,000 விளையாட்டு வீரர்கள் 36 வெவ்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர். பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டுகளான மல்லகம்பா, கோ-கோ மற்றும் கபடி ஆகியவையும் இதில் அடங்கும்.
பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் ஹரியானா
தேசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா வீரர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான மல்யுத்தத்தை தவிர, அம்மாநில வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நெட்பால் விளையாட்டில் சிறப்பாக விளையாடியுள்ளனர். மேலும், நெட்பால் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
பெண்களுக்கான நெட்பால் போட்டியின் இறுதிப் போட்டியில், ஹரியானா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. அரியானா 53-49 என்ற புள்ளிக்கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதேபோல், ஹரியானா மற்றும் தெலுங்கானா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியின் நெட்பால் இறுதிப் போட்டியில், ஹரியானா வீரர்கள் 75-73 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தி தங்கம் வென்றனர்.
வில்வித்தையில் இன்று தனிநபர் சுற்று சுற்றில் ஹரியானாவி வீரர் ரிஷப் யாதவ் மேலும் ஒரு தங்கம் வென்றார்.
பெண் ஹாக்கி அணி பூல் ஏ போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஏ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஹரியானா 30-1 என்ற கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதேபோல், ஒடிசாவுக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா 4-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது. தவிர, உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஹரியானா பெண்கள் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் உத்தரப் பிரதேசத்தை வீழ்த்தி வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
4வது இடத்தில் தமிழ்நாடு
தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை அள்ளிக் குவித்து வரும் இந்திய ஆயுதப் படைகளின் அணிகள் 40 தங்கம், 25 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 89 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 25 தங்கம், 22 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று குவித்துள்ள ஹரியானா அணி 2ம் இடத்தில் உள்ளது.
தமிழக அணியைப் பொறுத்தவரை 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.