ஜே.கே டயர் நிறுவனத்தின் 27-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் நடைபெற்றது.
எல்.ஜி.பி பார்முலா 4 போட்டியில் 15 சுற்றுகள் மற்றும் 20 சுற்றுகளில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
எல்.ஜி.பி ஃபார்முலா 4 பிரிவில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இளம் வீரர் டிஜில் ராவ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
இதே போல ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான சாம்பியன்ஷிப் 10 சுற்று போட்டியில் பாண்டிச்சேரியை சேர்ந்த நவநீத் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
பிரபல ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேற்றைய இறுதிப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள், கார் பந்தைய ஆர்வலர்கள் என ஏராளமானோர் போட்டியை கண்டு ரசித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“