பீகாரின், பாட்னாவில் நடைபெற்ற மாநில அளவிலான கோ விளையாட்டுப் போட்டியில், கோவை சேர்ந்த தமிழ்நாடு கோ கேம் அசோசியேஷன் மாணவ, மாணவியர் 16 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் மோதி, ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் மூன்று மாணவிகளும் இரண்டு மாணவர்களும் என மொத்தம் ஐந்து பேர் தமிழகம் சார்பில் பங்கேற்றனர். கடுமையான பயிற்சிக்குப் பிறகு கள மிறங்கிய இவர்கள், ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடினர். அதில் கோவை போத்தனூர் ரயில்வே பள்ளி மாணவி சம்ரிதா தங்கப் பதக்கம்மும், சுந்தராபுரம் பகுதியில் உள்ள செங்கோட்டையன் பள்ளி மாணவி லக்ஷனா , மது சுந்தராபுரம் பகுதியில் உள்ள விக்னேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மாணவி அபி மற்றும் மாணவர் சஞ்சய் ஆகிய நான்கு மாணவர்களும் வெள்ளிப் பதக்கமும் வென்று உள்ளனர்.
மாணவர்களுக்குப் பயிற்சியாளர் அருண் பயிற்சி அளித்து உள்ளார். சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் 23-வது இடத்தைப் பிடித்து உள்ள கோ விளையாட்டு, இந்தியாவில் மேலும் பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெற்றிவாகை சூடி போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வந்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இத்தகைய வெற்றிகள் தமிழகத்தில் கோ விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பயிற்சியாளர் பேசுகையில், கோ கேம் என்பது 2500 ஆண்டுகளுக்கு முன்பு சைனாவில் வந்ததாகவும், அவர்கள் விசு, பதுக்கா என்று அழைப்பதாகவும், இது சதுரங்க போட்டி போன்று மூளைக்கான விளையாட்டு என்றும், இந்த கோ கேம் விளையாட்டை ஊக்கப்படுத்த நண்பர்கள் மூலம் மாணவர் ஒருவருக்கு பயிற்சி அளித்ததாகவும், அவரை வைத்துக் கொண்டு இத்தனை பேரை உருவாக்கியதாகவும், இதுவரை மூன்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று காகவும், மூன்று போட்டிகளும் விளையாடும் போது புதிதாக சென்று விளையாடுவது போன்று இல்லாமல் அனைவரும் நன்றாக விளையாடி வென்று உள்ளதாகவும், இதுவரை தேசிய அளவில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களும், இரண்டு வெள்ளி பதக்கமும், வெண்கல பதக்கம் இதுவரை சென்றது கிடையாது என்றும், நமது போட்டியாளர்கள் குறைந்த அளவில் உள்ளதால், உலக போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்றும், அடுத்த தேசிய போட்டிகள் ஒரிசாவில் நடைபெறுவதாக அறிவித்து உள்ளனர் என்றவர், சீனியருக்கான போட்டிகள் நடைபெறுவதாகவும் அதில் மேலும் விளையாட்டு வீரர்களை அதிகப்படுத்தி போட்டிகளில் பங்கேற்று நல்ல முன்னேற்றம் அனைவரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் உலக அளவிலான போட்டிகள் ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளதாகவும், அதில் நமது மாணவர் கதிர் இந்திய அளவில் பங்கு பெறுவதற்கு பரிந்துரை செய்ததாகவும், சென்ற ஆண்டு கனடாவில் நடைபெற்ற போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் ஆனால் பொருளாதார ரீதியாக கலந்து கொள்ள முடியவில்லை என்று வேதனை தெரிவித்தவர். அதனால் இந்திய அளவில் சாதனை அடக்கி இருந்த மாணவரை நாம் இழந்து விட்டதாகவும் கூறியவர், மேலும் இந்த போட்டிகளுக்கான பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டு உள்ளதாகவும், பதிவு செய்து விட்டதாகவும் தெரிவித்தவர், சதுரங்கம் போன்று மூளைக்கு வேலை முடிப்பதற்கான போட்டி என்றும், எல்லையை எப்படி ? பாதுகாப்பது என்பது போன்று இந்து விளையாட்டு இருக்கும் என்றும் எல்லை மற்றும் எத்தனை பேர் காப்பாற்றுகிறோம் என்பது தான் இந்த விளையாட்டு. இதை விளையாடுவதன் மூலம் மாணவர்களுக்கு மூளையின் வளர்ச்சி அதிகரித்து அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு உடனடியாக முடிவெடுத்து செயல்படுவார்கள் என்றும், இந்த விளையாட்டுகளை அங்கீகரித்ததற்கு பின்னர் அரசாங்கம் இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு உதவிகள் செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று கூறினார்.
தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்க உள்ள மதுக்கரை ஸ்டடிவெல் கல்லூரி மாணவர் கதிர் இது குறித்து கூறும் போது :-
இந்த விளையாட்டு போட்டி மூன்றாண்டுகளாக தொடர்ந்து பங்கு பெற்று வருவதாகவும், எட்டு பேர் கொண்ட குழுவாக அவர்கள் சென்றதாகவும், இரண்டு தங்கப் பதக்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று வந்ததாகவும் கூறியவர், இந்த போட்டியில் 19 முதல் 20 மாநிலங்கள் பங்கு பெற்றதாகவும், அதில் 100 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றதாகவும் பல்வேறு பிரிவுகளில் ஜூனியர், சப் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகள் பங்கேற்றதாகவும், அதில் நாட் அவுட் கேட்டகிரியில் எளிதாக சீனியரும், சப் ஜூனியரும் வென்றதாகவும், தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதாகவும், சப் ஜூனியர் பிரிவில் தெலுங்கானா மற்றும் பீகார் உடன் போட்டியிட்டதாகவும், ஜூனியர் பிரிவில் ஒடிசா, சீனியர் தெலுங்கானாவுடன் வெற்றி பெற்றதாகவும் கூறினார். இந்தப் போட்டிகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், சதுரங்கப் போட்டி போன்று ஒரு பிழை ஏற்பட்டாலும் ஒரு புள்ளி குறைந்து ஒட்டு மொத்த பொட்டியும் முடிந்து விடும், அனைத்தையும் பாதுகாத்து விளையாட வேண்டும் அதில் ஒரு புள்ளிகள் விட்டாலும் மொத்தமாக தோல்வியை தழுவ வேண்டும் எனவே மிகுந்த கவனத்துடன் மூளைக்கு வேலை கொடுத்து விளையாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.