பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
coimbatore: இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான 67வது கராத்தே போட்டி, டெல்லியில் உள்ள சத்ரசார் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, மாணவ - மாணவியர்கள் பல்வேறு எடைப்பிரிவுகளில் கட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் பங்கேற்றனர்.
தமிழக அணி சார்பில் பங்கேற்ற, கோவை கணபதி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மோனிஸ்ரீ, 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான, தனிநபர் குமித்தே போட்டியில், 48 கிலோ எடைக்கு உட்பட்டோருக்கான பிரிவில், தங்கம் வென்று அசத்தினார். தங்கம் வென்ற மாணவிக்கு, மூன்று லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் சின்கின் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
கோவையில் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட மாணவ மாணவிகள் மற்றும் உலக கராத்தே கூட்டமைப்பின் நடுவர் சென்சாய். முத்து ராஜு மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“