scorecardresearch

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி : தங்கம் வென்று கோவை மாணவி சாதனை

தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் அசோசியேசன் இவர் இந்த போட்டியில் பங்கேற்க உதவி செய்துள்ளனர்.

Cycle
கோவை மாணவி சாதனை

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவி வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹரியானா மோர்னி மலையில் தேசிய அளவிலான சைக்கிள் போட்டி கடந்த 28, 29 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 18 வயதிற்கு கீழானவர்கள் கலந்து கொண்டனர். இதில் கோவையை சேர்ந்த 8ம் வகுப்பு ஹாசினி என்ற மாணவி கலந்து கொண்டு வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இவர் கடந்த ஐந்து வருடங்களாக இதற்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் அசோசியேசன் இவர் இந்த போட்டியில் பங்கேற்க உதவி செய்துள்ளனர்.

வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் அசோசியேசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஹேலோ இந்தியாவில் தங்க பதக்கமும் வென்றுள்ளதும் பல்வேறு ட்ராக் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: National mountain cycle competition coimbatore student won gold

Best of Express