Mohammed Shami | Arjuna Award | Vaishali R: விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தன. அதன்படி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், அர்ஜுனா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அர்ஜுனா விருதை வழங்கி கவுரவித்தார்.
President Droupadi Murmu acknowledges R Vaishali's brilliance in #Chess by presenting her with the #ArjunaAward2023. A tribute to her hard work, strategic acumen, and positive impact on the chess arena. pic.twitter.com/6ljBu1dLKh
— Ruchika (@BjpRuchika) January 9, 2024
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார். இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெறும் 26 விளையாட்டு வீரர்களில் ஒரே கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவார். ஷமி அண்மையில் இந்திய மண்ணில் நடைப்பெற்ற உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அத்துடன் பல்வேறு சாதனைகளை உலக கிரிக்கெட் அரங்கில் படைத்துள்ளார். இந்த ஆண்டு மூன்று வடிவங்களிலும் ஐ.சி.சி-யின் நம்பர் 1 அணியாக இந்தியா இருந்து வருவதில் ஷமி முக்கிய பங்கு வகித்தும் வருகிறார்.
President Droupadi Murmu presents the Arjuna Award 2023 to Mohammad Shami for his excellent performance.#NationalSportsAwards2023 @MdShami11 pic.twitter.com/m0NHOnvdG8
— Doordarshan Sports (@ddsportschannel) January 9, 2024
Congratulations to all the achievers for their outstanding performance in sports 😍
— Doordarshan Sports (@ddsportschannel) January 9, 2024
👏 Keep shining💫
Hear from our #Arjuna awardees as they share their feelings of gratitude and pride 🙌#NationalSportsAwards2023 #ArjunaAward pic.twitter.com/qSTqxoPhLV
இன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவின் சிறப்பாக செயல்பட்ட 26 விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு தேசிய விளையாட்டு விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். அவர்களின் விபரம் பின்வருமாறு:-
- ஓஜஸ் பிரவின் தியோடலே (வில்வித்தை)
President Droupadi Murmu presents National Sports Awards 2023 at Rashtrapati Bhavan!
— Doordarshan Sports (@ddsportschannel) January 9, 2024
LIVE here 📲 https://t.co/wnPUZ8Yunn#NationalSportsAwards2023 pic.twitter.com/xDsQ0J7mUX
2. அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
3. ஸ்ரீசங்கர் எம் (தடகளம்)
4. பருல் சவுத்ரி (தடகளம்)
5. முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
6. ஆர் வைஷாலி (சதுரங்கம்)
7. முகமது ஷமி (கிரிக்கெட்)
8. அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
9. திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி ஆடை)
10. திக்ஷா தாகர் (கோல்ப்)
11. கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
12. புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி)
13. பவன் குமார் (கபடி)
14. ரிது நேகி (கபடி)
15. நஸ்ரீன் (கோ-கோ)
16. பிங்கி (புல்வெளி கிண்ணங்கள்)
17. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (தூப்பாக்கி சுடுதல்)
18. இஷா சிங் (தூப்பாக்கி சுடுதல்)
19. ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
20. அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
21. சுனில் குமார் (மல்யுத்தம்)
22. ஆன்டிம் (மல்யுத்தம்)
23. நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)
24. ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)President Droupadi Murmu presents the Arjuna Award 2023 to Sheetal Devi for her excellent performance in Para Archery.#NationalSportsAwards2023 @Sheetal_archery pic.twitter.com/SFSSy8vv99
— Doordarshan Sports (@ddsportschannel) January 9, 2024
25. இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்)
26. பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)
ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வழக்கமாக ஆகஸ்ட் 29-ம் தேதி நடத்தப்படும் இந்த விருது வழங்கும் விழா, கடந்த ஆண்டு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.