515 பந்தில் 1045 ரன்கள்: 14 வயது மாணவனின் ஆக்ரோஷ ஸ்போர்ட்!

நவி மும்பையை சேர்ந்த தனிஷ்க் கவடே என்ற மாணவர் 515 பந்தில் 1,045 ரன்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார்

நவி மும்பையை சேர்ந்த தனிஷ்க் கவடே என்ற மாணவர் 515 பந்தில் 1,045 ரன்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

நவி மும்பையின் யஷ்வந்த்ராவ் சாவன் ஆங்கில வழி பள்ளியில், உள்ளூர் கிரிக்கெட் U14 தொடர் ஒன்றின் அரையிறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், விளையாடிய தனிஷ்க் கவடே, திங்கள் முதல் செவ்வாய் வரை தொடர்ந்து விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாக 515 பந்துகளை சந்தித்த தனிஷ்க், 1045 ரன்கள் குவித்துள்ளார். இதில், 149 பவுண்டரிகளும், 67 சிக்சர்களும் அடக்கம்.

இதுகுறித்து மாணவர் தனிஷ்கின் பயிற்சியாளர் கூறுகையில், “மைதானத்தின் லெக் சைட் பவுண்டரி 60-65 யார்டுகளாகவும், ஆஃப் சைட் பவுண்டரி 50 யார்டுகளாகவும் இருந்தது. இதில் தான் தனிஷ்க் 1045 ரன்கள் விளாசினார்’ என்றார்.

×Close
×Close