Neeraj Chopra becomes second individual Indian athlete : ஒலிம்பிக் போட்டிகளில் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் இந்திய வீரர்கள். இன்று ஈட்டி எறிதலில் தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக் போட்டிகளில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்ற பிறகு 13 வருட கால காத்திருத்தலுக்கு பிறகு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தகுதிச் சுற்றில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய சோப்ரா, இறுதி சுற்றில் 87.58 மீட்டரில் ஈட்டி எறிந்து புத்ஹிய சாதனை படைத்துள்ளார்.
முதலில் 87.03 மீட்டர் தூரத்தில் ஈட்டி எறிந்தார். பிறகு 87.58 மீட்டரில் எறிந்தார். மூன்றாவது சுற்றில் சருக்கிய அவர் 79.39 மீட்டரே எரிந்தார். நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றில் அவர் 80 மீட்டர் இலக்கை நெருங்கவில்லை என்ற போதிலும் இறுதி முயற்சியில் அவர் 84.24 மீட்டர் தூரத்தில் ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார்.
ஜெர்மனி நாட்டின் ஜோஹான்னெஸ் வெட்டருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் இறுதி எட்டுக்குள் நுழைய முடியவில்லை. அவருடைய முதல் சுற்றில் அவர் 82.52 மீட்டர் தூரத்தில் ஈட்டி எறிந்தார். பிறகு இரண்டு சுற்றிலும் அவரால் இலக்கை அடைய இயலவில்லை. மேலும் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 9வது இடத்தையே பிடித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil