33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
2-வது பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 87.58 மீட்டர் தூரம் வரை எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். அதனை மீண்டும் ஒருமுறை நிகழ்த்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Neeraj Chopra Final Live Streaming, Olympics Javelin Throw
இந்த நிலையில், நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியை நேரலையில் பார்ப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி எப்போது நடைபெறும்?
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி எங்கு நடைபெறுகிறது?
நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி பாரீஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி எத்தனை மணிக்கு தொடங்குகிறது?
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 8, வியாழக்கிழமை இரவு 11:55-க்கு (இந்திய நேரப்படி) தொடங்கும்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியை எந்த டி.வி சேனல்கள் ஒளிபரப்பும்?
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இந்தியாவில் உள்ள ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியின் நேரலை ஒளிபரப்பை எப்படிப் பார்ப்பது?
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“