உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டிகள் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Neeraj Chopra’s Diamond League Final 2024 Highlights
இந்தத் தொடர் உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட நிலையில், இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்தது. இந்த தொடரில் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். நேற்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.
அதேநேரத்தில், பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் அதிகபட்சமாக 3-வது சுற்றில் 87.86 மீட்டர் எறிந்து இருந்தார்.
இந்தப் போட்டியில் கரீபிய தீவு நாடான கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். அவர் முதல் இடம் பிடிக்க 87.87 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இருந்தார். அதேவேளையில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே எறிந்தார். இருவருக்கும் இடையே ஒரு சென்டி மீட்டர் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில், ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.
ஒரு சென்டி மீட்டரில் முதல் இடத்தையும் தங்கப் பதக்கத்தையும் தவற விட்ட இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2 ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்ற வீரர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. தங்கம் வென்ற அர்ஷத் நதீம் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“