Advertisment

தங்கத்தை தக்க வைப்பாரா நீரஜ் சோப்ரா? பாரிஸில் ஈட்டி ஏறியப் போவது எப்போது?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா எப்போது களத்தில் இறங்கப் போகிறார், அவர் களமாடும் போட்டி எப்போது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neeraj Chopra

பாரிஸில் அனைத்து கள போட்டிகளைப் போலவே ஈட்டி எறிதல் போட்டியும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அதாவது, தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் பதக்கச் சுற்று என நடக்கும்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

டோக்கியோ தங்கம் 

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா எப்போது களத்தில் இறங்கப் போகிறார், அவர் களமாடும் போட்டி எப்போது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Neeraj Chopra and Kishore Jena LIVE Score, Javelin Throw Paris Olympics 2024 Qualification round

ஈட்டி எறிதலில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனாக வலம் வரும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற சாதனையையும் பெருமையும் அவர் பெற்றார். 

Neeraj Chopra, Javelin throw, today news, tamil news, tamil nadu news, sports news

26 வயதான நீரஜ் சோப்ரா டோக்கியோவில் 87.58 மீட்டர் தூரம் வரை ஈட்டியை எறிந்தார். அவரைத்தொடர்ந்து, செக்கியாவைச் சேர்ந்த ஜக்குப் வட்லெஜ் 86.67 மீட்டர் தூரம் வரை எறிந்து வெள்ளியும், செக்கியாவைச் சேர்ந்த விட்டிஸ்லாவ் வெசெலி 85.44 மீட்டர் தூரம் வரை எறிந்து வெண்கலம் வென்றார். 

நீரஜ் சோப்ரா பாரிஸில் ஈட்டி எறிவது எப்போது? 

பாரிஸில் அனைத்து கள போட்டிகளைப் போலவே ஈட்டி எறிதல் போட்டியும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அதாவது, தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் பதக்கச் சுற்று என நடக்கும். 

32 பேர் பங்கேற்கும் தகுதிச் சுற்றில் ஏ மற்றும் பி என இரண்டு குழுக்களாக வீரர்கள் பிரிக்கப்படுவார்கள். பின்னர் ஒருவர் பின் ஒருவராக ஈட்டிகளை எறிவர். அடுத்த சுற்றான இறுதிப் பதக்கச் சுற்றுக்கு முன்னேற அல்லது தகுதி பெற ஒரு வீரர் 84.00 மீ தூரம் ஏறிய வேண்டும். இதனை எட்டும் பட்சத்தில் அந்த வீரர் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறலாம்.

12-க்கும் குறைவானவர்களே தானாகவே தகுதி பெற முடிந்தால், தகுதிச் சுற்றுகளில் இருந்து அடுத்த அதிகபட்ச தரவரிசையில் உள்ள விளையாட்டு வீரர்கள், குறைந்தது 12 பேர் வரை இறுதிப் போட்டியில் சேர்க்கப்படுவார்கள். தகுதிச் சுற்றில் 12 பேருக்கு மேல் 84.00 மீ தூரத்தை எறிந்து தகுதி பெற்றால், அவர்கள் அனைவருமே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

ஈட்டி எறிதலில் ஏ குழு இடம் பெறும் முதல் தகுதிச் சுற்று போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 1:50 மணிக்கு தொடங்கும். பி குழு இடம் பெறும் 2வது தகுதிச் சுற்று போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கும். இந்த பி குழுவில் தான் இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா இடம் பெற்று இருக்கிறார். 

Neeraj Chopra qualifies 2024 Paris Olympics, enters World Championships final Tamil News

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி குழுக்கள்

குரூப் ஏ: ஜூலியஸ் யெகோ (கென்யா), ஆலிவர் ஹெலாண்டர் (பின்லாந்து), லியாண்ட்ரோ ராமோஸ் (போர்ச்சுகல்), கேஷோர்ன் வால்காட் (டிரினிடாட் மற்றும் டொபாகோ), கிஷோர் ஜெனா (இந்தியா), டெயூராயி துபையா (பிரான்ஸ்), ஜூலியன் வெபர் (ஜெர்மனி) , ரோட்ரிக் ஜென்கி டீன் (ஜப்பான்), அலெக்ஸாண்ட்ரு மிஹைதா நோவாக் (ருமேனியா), டேவிட் வெக்னர் (போலந்து), டோனி கெரானென் (பின்லாந்து), இஹாப் அப்தெல்ரஹ்மான் (எகிப்து), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா), பேட்ரிக்ஸ் கெய்லம்ஸ் (லாட்வியா), பெட்ரோ ஹென்ரிக் ரோட்ரிக்யூஸ் ), ஜக்குப் வாட்லெஜ் (செக்கியா). 

குரூப் பி: நீரஜ் சோப்ரா (இந்தியா), கேட்டிஸ் காக்ஸ் (லாத்வியா), மேக்ஸ் டெஹ்னிங் (ஜெர்மனி), கேமரூன் மெக்என்டைர் (ஆஸ்திரேலியா), அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்), மார்சின் க்ருகோவ்ஸ்கி (போலந்து), லஸ்ஸி எடெலடலோ (பின்லாந்து), நான்டி சினிசெரெம் (நைகேரியா) , லூயிஸ் மொரிசியோ டா சில்வா (பிரேசில்), மௌஸ்தாபா மஹ்மூத் (எகிப்து), ஆர்டர் ஃபெல்ஃப்னர் (உக்ரைன்), திமோதி ஹெர்மன் (பெல்ஜியம்), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா), ஆன்ட்ரியன் மர்டரே (மால்டோவா), எடிஸ் மாடுசெவிசியஸ் (லிதுவேனியா), 
சைப்ரியன் மிர்சிக்லோட் (போலந்து). 

ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) பகல் 11:55 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Neeraj Chopra Paris 2024 Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment