World Athletics Championships 2023 Javelin Throw Qualification - Neeraj Chopra Tamil News: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகிற 27ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது. இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
இந்நிலையில், இன்று இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது. இதில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.00 மீட்டர் வீச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் வீசி அசத்தினார்.
இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். மேலும், மிகவும் நீண்ட தூரம் வீசியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil