Advertisment

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… ஈட்டி எறிதலில் மிரட்டிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

புடாபெஸ்டில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் வீசி அசத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neeraj Chopra qualifies 2024 Paris Olympics, enters World Championships final Tamil News

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் நீண்ட தூரம் வீசியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.

World Athletics Championships 2023 Javelin Throw Qualification - Neeraj Chopra Tamil News: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகிற 27ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது. இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

Advertisment

இந்நிலையில், இன்று இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது. இதில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.00 மீட்டர் வீச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் வீசி அசத்தினார்.

இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். மேலும், மிகவும் நீண்ட தூரம் வீசியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Neeraj Chopra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment