Neeraj Chopra Tamil News: சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு களமாடினார். தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் 88.44 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றார்.
இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து, பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Golds,Silvers done, he gifts a 24-carat Diamond 💎 this time to the nation 🇮🇳🤩
— Athletics Federation of India (@afiindia) September 8, 2022
Ladies & Gentlemen, salute the great #NeerajChopra for winning #DiamondLeague finals at #ZurichDL with 88.44m throw.
FIRST INDIAN🇮🇳 AGAIN🫵🏻#indianathletics 🔝
X-*88.44*💎-86.11-87.00-6T😀 pic.twitter.com/k96w2H3An3
டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த நீரஜ் சோப்ரா, அதிர்ச்சிகரமான ஃபவுலுடன் தொடங்கினார். மற்ற வீரர்கள் முதல் முயற்சியில் நன்றாக வீச சோப்ரா பட்டியலில் கடைசியில் இருந்தார். ஆனால், சற்றும் மனம் தளராத அவர் தனது 2வது முயற்சியில் அனைவரையும் வியக்க வைக்கும் வண்ணம் 88.44 மீ தூரம் எறிந்து சாதனை படைத்தார். அவரது பெயரும் பட்டியலில் முன்னேறியது. இதன் பிறகு, சோப்ரா தனது 3-வது முயற்சியில் 88 மீ தூரமும், 4-வது முயற்சியில் சோப்ரா 86.1 மீ தூரமும் எறிந்தார்.
சோப்ராவின் சிறந்த த்ரோவான 88.44 மீ தூரம், அவர் பதக்கத்தை முத்தமிடமும், டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற உதவியது.
88.44m!
— Wanda Diamond League (@Diamond_League) September 8, 2022
Just a few weeks after his first ever #DiamondLeague win, @Neeraj_chopra1 claims his first ever Diamond Trophy!#ZurichDL🇨🇭#DLFinal💎
📷 @matthewquine pic.twitter.com/bwf3kzpMtc
சோப்ரா ஒலிம்பிக்கில் டிராக் அண்ட் ஃபீல்ட் தங்கம் வென்ற முதல் இந்தியர், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் இப்போது டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil