பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 12 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா, இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி 2 வது இடம்பித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்கள் வென்ற முன்றாவது இந்தியர் என்ற பெருமையை நிரஜ் ஜோப்ரா பெற்றார்.
ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.27 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எய்து புதிய சாதனையை படைத்து தங்கம் வென்றார். கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரத்திற்கு வீசி 3 வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“