Advertisment

TNPL 2023 NRK vs MADURAI: இறுதிவரை திக்.. திக்... மதுரை அணியை 4 ரன்களில் வீழ்த்தியது நெல்லை

டி.என்.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதியது

author-image
WebDesk
New Update
Nellai Royal Kings vs Siechem Madurai Panthers, Eliminator Tamil News

டி.என்.பி.எல் 2023: எலிமினேட்டர் சுற்று; நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதல்

Nellai Royal Kings vs Siechem Madurai Panthers, Eliminator Tamil News: 7வது டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

Advertisment

இதில் நேற்று இரவு நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிங்கிய செல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய ராஜகோபால், 50 பந்துகளில் 6 சிக்சர் 2 பவுண்டரியுடன் 76 ரன்களும்,  குருசாமி 30 பந்துகளில் 50 ரன்களும், ஈஸ்வரன் 10 பந்துகளில் 29 ரன்களும் குவித்தனர்.

தொடர்ந்து 212 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில்,  இறுதிக்கட்டத்தில் நெல்லை அணியின் அசத்தல் பந்துவீச்சால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மதுரை அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆதித்யா 50 பந்துகளில் 73 ரன்களும், லோகேஷ்வர் 26 பந்துகளில் 40 ரன்களும், ஸ்வப்னில் சிங் 30 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி அடுத்து குவாலிபையர் 2 போட்டியில் திண்டுக்கல் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் கோவை கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Tnpl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment