Advertisment

Ned vs SL Live Score: இலங்கை சிறப்பான பேட்டிங்... விக்கெட் வீழ்த்த போராடும் நெதர்லாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் லக்னோவில் நடக்கும் 19-வது லீக்கில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகின்றன.

author-image
WebDesk
New Update
Netherlands vs Sri Lanka World Cup 2023 Live Score updates Lucknow  in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: நெதர்லாந்து - இலங்கை அணிகள் மோதல்

worldcup 2023 | netharlands | srilanka13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) லக்னோவில் நடக்கும் 19-வது லீக்கில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை அணியுடன் மோதி வருகின்றன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Netherlands vs Sri Lanka Live Score, World Cup 2023

டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங்

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் டாப் ஆடரில் களமாடிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். மிடில் -ஆடரில் களமாடிய சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் - லோகன் வான் பீக் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இதில் ஏங்கல்பிரெக்ட் 70 ரன்களை எடுத்தும், லோகன் வான் பீக் 59 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி நெதர்லாந்தை 49.4வது ஓவரில் ஆல்-அவுட் எடுத்தனர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி 262 ரன்கள் எடுத்தது. இதனால், இலங்கை அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி தரப்பில் டில்ஷான் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித தலா 4 விக்கெட்டுகளையும், தீக்ஷன ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

தொடர்ந்து 263 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்க -  குசல் பெரேரா களமிறங்கிய நிலையில், குசல் பெரேரா 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பதும் நிஸ்ஸங்க அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

தற்போது சரித் அசலங்கா - சதீர சமரவிக்ரம ஜோடி களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இலங்கை அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. 

 

இரு அணிகளின் பிளேயிங் லெவன் 

இலங்கை:  பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, சாமிக்க கருணாரத்ன, மஹீஸ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென். 

முன்னாள் சாம்பியனான இலங்கை நடப்பு தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணியாக கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. இலங்கை அணி தனது முதல் 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் அடி வாங்கியது. மறுபுறம் நெதர்லாந்து அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும், 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும் தோல்வி கண்டது. ஆனால் கடந்த ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கை அணிக்கும் அதிர்ச்சி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Srilanka Netharlands
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment