Advertisment

சிறப்பு நிகழ்ச்சி இந்தியா - பாக்,. போட்டிக்கு மட்டும் தானா? பி.சி.சி.ஐ மீது நெட்டிசன்கள் சாடல்

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கு முன்னதாக நடக்கவுள்ள சிறப்பு நிகழ்ச்சி தொடர்பாக நெட்டிசன்கள் பி.சி.சி.ஐ-யை கடுமையாக சாடியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Netizens slam  BCCI for India vs Pakistan pre match show Tamil News

உலகக் கோப்பை போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி மட்டும்தானா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

worldcup 2023 | india-vs-pakistan | ahmedabad: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.  

Advertisment

இந்நிலையில், இந்தப் போட்டியை சிறப்பிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. போட்டி தொடங்க 45 நிமிடத்திற்கு முன்னதாக  இந்த இசை நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. இதனை பிசிசிஐ தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

இந்த நிலையில், இந்த சிறப்பு நிகழ்ச்சி தொடர்பாக நெட்டிசன்கள் பி.சி.சி.ஐ-யை கடுமையாக சாடியுள்ளனர். உலகக் கோப்பை போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி மட்டும்தானா என்று கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், இது இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முந்தைய மற்றும் பிறகான போட்டிகளில் விளையாடும் அணிகளின் பங்கேற்பு முக்கியமில்லை என்பதை காட்டுவதாக தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசியுள்ள மூத்த புகைப்படக் கலைஞர் அதுல் கஸ்பேகர், போட்டியின் முதல் ஆட்டத்திற்கு தொடக்க விழா இல்லை. ஆனால் லீக் போட்டிக்கு முன்னதாக பாடல் மற்றும் நடனம் நிகழ்த்தப்படுகிறது. உலகக் கோப்பை என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆட்டத்தை விட முக்கியமானது என்று அவர் பி.சி.சி.ஐ-யை கடுமையாக சாடியுள்ளார்.

“பாடலும் நடனமும் விளையாட்டின் தொடக்கத்திலிருந்தே ஸ்டேடியம் நிரம்பியிருப்பதை உறுதிசெய்யும் உணர்வைப் பெறுங்கள். இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டியை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மற்ற அணிகளைப் பற்றி யாரும் கவலைப்படாமல் இருப்பது சங்கடமாக இருக்கிறது. அவர்கள் உலகின் சிறந்த அணிகள்." என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். 

"பிசிசிஐ தீவிர அபத்தமானது !!!!!!!! அந்த நிதிகள் எங்கு செல்கின்றன என்று இப்போது எங்களுக்குத் தெரியும்!!!! தொடக்க விழா அல்லது அணிகள் இல்லாதது மிகவும் சங்கடமாக இருக்கிறது.." என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ahmedabad Worldcup India Vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment