Advertisment

அனுஷ்கா, அதியா மீது பெண் வெறுப்பு கருத்து: ஹர்பஜனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது அனுஷ்கா மற்றும் அதியா குறித்து பெண் வெறுப்பு கருத்து தெரிவித்ததற்காக நெட்டிசன்கள் ஹர்பஜன் சிங்கை வெளுத்து வாங்குகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Netizens slam Harbhajan for sexist  comment Anushka and Athiya during ind vs aus final match

இந்திய அணியை உற்சாகப்படுத்த விராட் கோலி மனைவியும், நட்சத்திர நடிகையுமான அனுஷ்கா சர்மா மற்றும் கே.எல்.ராகுல் மனைவி அதியா ஷெட்டி ஆகியோரும் ஸ்டேடியத்திற்கு வந்தனர்.

worldcup 2023 | india-vs-australia | harbhajan-singh: 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

Advertisment

241 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், இந்திய வீரர்களும் ஆட்டகளத்தில் இருந்து கண்ணீருடன் சென்ற வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia World Cup: Netizens slam Harbhajan Singh for ‘sexist’ comment at Anushka Sharma, Athiya Shetty during match

ஹர்பஜன் சிங்கை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் 

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டி ஆகியோரின் கிரிக்கெட் குறித்த புரிதலை கேள்விக்குள்ளாக்கி இருந்தார். மேலும், அவர்களுக்கு எதிராக அவர் பாலியல் ரீதியான கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்து இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, ஹர்பஜன் சிங்கை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காணவும், இந்திய அணியை உற்சாகப்படுத்தவும் பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆயுஷ்மான் குரானா மற்றும் ஷனாயா கபூர், ஷாருக்கான் குடும்பத்தினர் கவுரி, ஆர்யன், சுஹானா மற்றும் அப்ராம் ஆகியோர் வருகை தந்தனர்.  இதேபோல், இந்திய அணியை உற்சாகப்படுத்த விராட் கோலி மனைவியும், நட்சத்திர நடிகையுமான அனுஷ்கா சர்மா மற்றும் கே.எல்.ராகுல் மனைவி அதியா ஷெட்டி ஆகியோரும் ஸ்டேடியத்திற்கு வந்தனர். 

முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி பேட்டிங் செய்யும் போது, ​​ஹர்பஜன் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது கேமரா அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டியை நோக்கி திரும்பியது. அப்போது, ​​​​"அவர்களது இந்த உரையாடல் கிரிக்கெட் அல்லது திரைப்படத்தைப் பற்றியதா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் கிரிக்கெட் பற்றி அவர்களுக்கு எந்த அளவுக்கு புரிதல் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை." என்று தெரிவித்தார். 

இந்நிலையில், ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். அவர் பெண்கள் மீது வெறுப்பு கக்குகிறார் என்றும், 'கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளான அனுஷ்கா மற்றும் அதியாவுக்கு கிரிக்கெட் அறிவு இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுன்னர். 

"அவர்கள் கிரிக்கெட் அல்லது திரைப்படங்களைப் பற்றி பேசுகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை, அவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் தெரியாது என்று நான் நினைக்கிறேன் என ஹர்பஜன் கூறுவது சரியானதாக இல்லை. அதை அவர்  கூலாக கூறுவதாகவும் தோன்றவில்லை" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். 

"ஹர்பஜன் சிங் ஏன் “அனுஷ்கா மற்றும் அதியா மீது பெண் வெறுப்பு கருத்தை கூறுகிறார்?! "அவர்கள் கிரிக்கெட் அல்லது திரைப்படங்களைப் பற்றி பேசுகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை, அவர்களுக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது என்று நான் நினைக்கிறேன்" என அவர் பேசும் போது வர்ணனையில் உள்ள மற்றவர்கள் அவரை களத்தில் இருப்பவர்களைப் பற்றி பேசுவதைப் பற்றி கேள்வி எழுப்ப முடியுமா?" மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia Worldcup Harbhajan Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment