Shamik Chakrabarty, Devendra Pandey
New cricket officialdom : கிரிக்கெட் சங்கங்களில் பதவிகளை வகித்த முன்னாள் தலைவர்கள் யாரும் தற்போது அவர்களின் பெஞ்சில் இல்லை. அவர்கள் அனைவரும் காலி செய்யப்பட்டுவிட்டனர். என். ஸ்ரீநிவாசன், நிரஞ்சன் ஷா, அனுராக் தாக்கூர், அமித் ஷா, பரிமல் நத்வானி, சிராயு அமின் என யாரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலாக? அவர்களுக்கு பதிலாக அவர்களின் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். பி.சி.சி.ஐயின் பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் 23ம் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இந்த வாரிசுகள் தான் முக்கிய உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
வாரிசுகளால் நிரம்பியிருக்கும் கிரிக்கெட் சங்கங்கள்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் முன்னாள் பி.சி.சி.ஐ தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மகள். சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருப்பவர் நிரஞ்சன் ஷாவின் மகன் ஜெய்தேவ் ஷா. நிரஞ்சன் ஷா 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த சங்கத்தின் செயலாளராக பணியாற்றியுள்ளார். பி.சி.சி.ஐ தலைவராக பணியாற்றிய தற்போதைய இணை நிதி அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் ஹிமாச்சல் பிரதேசத்தின் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறார்.
Rupa Gurunath appointed TNCA news President - மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத் - காத்திருக்கும் சவால்கள்
குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக பணியாற்றிய அமித் ஷாவின் மகன் தற்போது பி.சி.சி.ஐ எ.ஜி.எம். பதவிக்கான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார். குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருப்பவர் ராஜ்யசபை உறுப்பினர் பரிமல் நத்வானியின் மகன் தன்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் நிர்வாக குழுத்தலைவர் வினோத் ராயிடம் இது குறித்து கேட்ட போது, “உச்ச நீதிமன்றத்தின் வரம்புகளுக்கு உள் தான் தலைவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள் தலைவர்களாகிறார்கள். இதில் எதுவும் பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பி.சி.சியின் முன்னாள் துணை தலைவர் சிராயு அமினின் மகன் பிரணவ் தற்போது பரோடாவின் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார். மறைந்த ஜெய்வந்த் லேலே-ன் மகன் அஜித் அச்சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
விதர்பான் கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.சி.சி. சேர்மன் ஷாஷங்க் மனோகரின் மகன் அத்வைத் பணியாற்றி வருகிறார். உத்திர பிரதேச கிரிக்கெட் அசோசியேசன் தலைவராக யதுபதி சிங்கானியா தன் தந்தையை தொடர்ந்து பொறுப்பில் அமர்ந்துள்ளார். மும்பை, கோவா, ஒடிசா மற்றும் நாகலாந்து மாநிலங்களிலும் குடும்ப உறுப்பினர்களே முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர். ராமசாமி கூறுகையில் ”ரூபா குருநாத் பிஸினஸ் ரன் செய்து வருகிறார். அவரால் சுயமாக முடிவுகளை எடுக்க இயலும். முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசன் அவரை நாமினேட் செய்யவில்லை ஆனால் எங்கள் குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக அவரை வரவேற்கின்றோம் என்று கூறினார்.
ஜெய்தேவ் ஷாவிடம் கேள்வி எழுப்பிய போது, நான் சௌராஷ்ட்ராவின் ராஞ்சி அணியில் 110 போட்டிகள் விளையாடியுள்ளேன். நான் பதவிக்கு வரும் போது அது மற்ற வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அப்பா பெயரால் எதுவும் ஆகப்போவதில்லை. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று கூறியுள்ளார் அவர்.
பெங்கால் கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் சௌரவ் கங்குலியின் மாமாவான தெபஷிஷ் தற்போதைய அச்சங்க பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவிஷேக் டால்மியா மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர். அவருடைய அப்பா ஜக்மோகன் டால்மியா 2015-ம் ஆண்டு மறைந்த பின்பு தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் வந்தார்.