டெல்லியில் செஸ் உலகக் கோப்பை: அக். 31-ல் தொடக்கம்; இந்த 2 இடங்கள் தேர்வு

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் செஸ் உலகக் கோப்பை டெல்லியில் நடைப்பெற இருப்பதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எஃப்) நிர்வாகிகள் இரண்டு பேர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதி செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New Delhi to host FIDE World Cup Bharat Mandapam and Yashobhoomi prime candidates to host event Tamil News

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் செஸ் உலகக் கோப்பை டெல்லியில் நடைப்பெற இருப்பதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எஃப்) நிர்வாகிகள் இரண்டு பேர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதி செய்துள்ளனர்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் செஸ் உலகக் கோப்பை டெல்லியில் நடைப்பெற இருப்பதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எஃப்) நிர்வாகிகள் இரண்டு பேர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதி செய்துள்ளனர். இந்தப் போட்டியானது வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள பாரத மண்டபம் அல்லது யஷோபூமியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: New Delhi to host FIDE World Cup; Bharat Mandapam and Yashobhoomi ‘prime candidates’ to host event

ஃபிடே உலகக் கோப்பையில் 206 வீரர்கள் போட்டியிடுவதால், அதனை வெல்வது மிகவும் சவாலானது, 2023 ஆம் ஆண்டில் கார்ல்சன் கூட முதல் முறையாக அதை வென்றார். உலகக் கோப்பை எட்டு சுற்றுகளில் நாக் அவுட் முறையில் விளையாடப்படுகிறது. தரவரிசை முதல் 50 இடத்தில் உள்ள வீரர்கள் இரண்டாவது சுற்றில் இருந்து அதிரடியில் நுழைவார்கள். 

ஃபிடே உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியும் இரண்டு கிளாசிக்கல் கேம்களின் தொகுப்பாக விளையாடப்படுகிறது, ஆட்டம் 1 மற்றும் 2 இடையே நிறங்கள் பரிமாறப்படுகின்றன. இரண்டு கேம்களும் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியாவிட்டால், டைபிரேக்குகள் உள்ளன.

Advertisment
Advertisements

இந்த செஸ் உலகக் கோப்பையில் அர்ஜுன் எரிகைசி, ஆர் பிரக்ஞானந்தா மற்றும் விடித் குஜ்ராத்தி போன்ற இந்தியாவின் தலைசிறந்த செஸ் நட்சத்திரங்கள் களமாட உள்ளனர். ஏனெனில், இந்த  மூன்று வீரர்களும் கேண்டிடேட்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷுக்கு சவாலான வீரரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிப்போட்டியாக கேண்டிடேட்ஸ் போட்டி இருக்கும். கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், பிரக்ஞானந்தா 2024 ஆம் ஆண்டுக்கான போட்டிக்குத் தகுதிபெற இறுதிப் போட்டியை எட்டியிருந்தார். அவர் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி தோல்வியுற்றார். முன்னதாக அவர் எரிகைசி, ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா போன்றவர்களை தோற்கடித்தார்.

இதற்கிடையில், 2026 உலக சாம்பியன்ஷிப்பை நடத்த இந்தியா முயற்சி செய்யும் என்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில், குகேஷ் தனது உலக சாம்பியன்ஷிப் படத்தை தக்க வைக்க களமாடுவார். 

“உலகக் கோப்பையை டெல்லியில் நடத்த வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிந்தோம், எங்களுக்கு என்.ஓ.சி கிடைத்தது. எனவே இது பெரும்பாலும் டெல்லியில் நடத்தப்படும். பாரத் மண்டபம் மற்றும் யஷோபூமி ஆகியவை இந்த நிகழ்வை நடத்துவதற்கான முதன்மையான இடங்கள். 2026ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கான டெண்டர் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் நாங்கள் அதற்கான வலுவான முயற்சியை மேற்கொள்வோம், மேலும் அந்த நிகழ்வை இந்தியாவிற்கும் கொண்டு செல்ல முயற்சிப்போம்." என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு இந்திய நகரங்களான, டெல்லி மற்றும் சென்னை, 2024 இல் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்திட சிங்கப்பூருடன் போட்டி போட்டன. ஆனால், ஏலத்தில் வென்று சிங்கப்பூர் போட்டியை நடத்தியது. அந்தப் போட்டியில் குகேஷ் டிங் லிரனை தோற்கடித்த இளம் மற்றும் 18-வது உலக சாம்பியனானார். 

2024 உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கும் யஷோபூமியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது.  இதற்கிடையில், பாரத் மண்டபம் 2023 இல் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்தியது. ஃபிடே உலகக் கோப்பையைத் தவிர, புனேவில் பெண்கள் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியையும் இந்தியா நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Chess Delhi International Chess Fedration

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: