கொரோனா ஃப்ரீ நாடான நியூசிலாந்து! – ஜேம்ஸ் நீஷம் கண்டுபிடித்த 3 காரணங்கள்

கொரோனா வைரஸால் கடைசியாக பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துவிட்டார் என்று சுகாதார அதிகாரிகள் திங்களன்று கூறியதையடுத்து, நியூசிலாந்து இப்போது கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழித்த நாடாக உருவெடுத்துள்ளது. திங்கட்கிழமையன்று, நியூசிலாந்தில் COVID-19 வைரஸுக்கு எந்த நபரும் சிகிச்சை பெறவில்லை. மேலும் கடந்த 17 நாட்களுக்கு எந்த ஒரு புதிய நோய்த்தொற்றும்…

By: Published: June 8, 2020, 5:03:00 PM

கொரோனா வைரஸால் கடைசியாக பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துவிட்டார் என்று சுகாதார அதிகாரிகள் திங்களன்று கூறியதையடுத்து, நியூசிலாந்து இப்போது கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழித்த நாடாக உருவெடுத்துள்ளது.

திங்கட்கிழமையன்று, நியூசிலாந்தில் COVID-19 வைரஸுக்கு எந்த நபரும் சிகிச்சை பெறவில்லை. மேலும் கடந்த 17 நாட்களுக்கு எந்த ஒரு புதிய நோய்த்தொற்றும் பதிவு செய்யப்படவில்லை.

இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் வருகை பலனளிக்கும் – இயான் சேப்பல் கணிப்பு

அங்கு, எந்தவித காரணமும் இன்றி, வைரஸ் பரவிய கடைசி வழக்கு ஏப்ரல் 30 அன்று நிகழ்ந்தது என்று அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஈ.எஸ்.ஆர்) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது, வைரஸ் ஒழிப்பால், நிம்மதி அடைந்துள்ள நியூசிலாந்து, ரசிகர்களை மீண்டும் விளையாட்டு மைதானங்களை நோக்கி இழுப்பதிலும், இசை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும், விமானங்களில் இருந்து இருக்கை கட்டுப்பாடுகளை நீக்குவது போன்றவற்றில் முதன்மையான நாடாக இருக்கும்,

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் நீஷம் தனது சக குடிமக்களின் இந்த அபார சாதனைக்கு வாழ்த்தியுள்ளார். அவர்களின் வெற்றிக்கு திட்டமிடல், உறுதிப்பாடு மற்றும் குழுப்பணி ஆகிய மூன்று விஷயங்களுக்கு காரணம் என்று கூறினார்.


இதற்கிடையில், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் திங்களன்று ஊடகங்களில் உரையாற்றிய போது, “நியூசிலாந்தில் வைரஸ் பரவுவதை நாம் இப்போது அகற்றிவிட்டோம் என்று நம்புகிறோம், ஆனால் ஒழிப்பு என்பது ஒரே நிமிடத்தில் நடந்துவிடவில்லை. அது ஒரு தொடர்ச்சியான முயற்சி.”

ஃபினிஷர் தோனி தெரியும்; ஓப்பனர் தோனி தெரியுமா? – அந்த அடி எப்படி இருக்கும் தெரியுமா? (வீடியோ)

“நாம் நிச்சயமாக இங்கே மீண்டும் பாதிப்புகளை பார்ப்போம், மீண்டும் சொல்ல விரும்புகிறேன், நாம் நிச்சயமாக இங்கே மீண்டும் பாதிப்புகளை பார்ப்போம், அது நாம் தோல்வியுற்றதற்கான அறிகுறி அல்ல, இது இந்த வைரஸின் உண்மை. ஆனால் அது நிகழும் போது, அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் – நாங்கள் இருக்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:New zealand became coronavirus free jimmy neesham cricket news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X