Advertisment

இந்தியாவை வீழ்த்த சி.எஸ்.கே.தான் காரணம்; நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா சொன்ன சீக்ரெட்!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அந்த அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா, இந்தியாவை வீழ்த்த சி.எஸ்.கே.தான் காரணம் என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rachin Ravindra x

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அந்த அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா, இந்தியாவை வீழ்த்த சி.எஸ்.கே.தான் காரணம் என்று கூறியுள்ளார். (PTI Photo/Shailendra Bhojak)

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அந்த அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா, இந்தியாவை வீழ்த்த சி.எஸ்.கே.தான் காரணம் என்று கூறியுள்ளார்.

Advertisment

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. அதில், இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

கடந்த ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணியில் விளையாடியவரும் இந்திய வம்சாவளி நியூசிலாந்து வீரருமான ரச்சின் ரவீந்திரா, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்து அந்த அணி வெற்றி பெற காரணமாக இருந்தார். இந்த ஆட்டத்தில், ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் பெற்றுள்ளது. 

இதைத் தொடர்ந்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி , அக்டோபர் 26-ம் தேதி தொடங்க உள்ளது. 

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா அளித்த பேட்டியில் கூறியதாவது, “பெங்களூரு நல்ல நகரம். இங்கே பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. பார்ம் மற்றும் புட் ஒர்க் ஆகிய இரண்டிலும் தயாரானேன். என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும் வரை அனைத்தும் சிறப்பாக செல்லும். இந்த தொடருக்காக தயாரானது உதவி செய்தது. அதற்காக நான் கருமண், செம்மண் போன்ற வித்தியாசமான பிட்ச்களில் வித்தியாசமான பவுலர்களுக்கு எதிராக பயிற்சி எடுக்க முயற்சித்தேன்.

சென்னையில் அந்த உதவிகள் கிடைத்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். சென்னையில் தரமான நேரத்தை செலவிட்டேன். அதற்காக சி.எஸ்.கே-வுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். அது எனக்கு உதவியது. பெங்களூருவில் எங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது” என்று ரச்சின் ரவீந்திரா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs New Zealand Rachin Ravindra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment