Worldcup | new-zealand vs afghanistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: New Zealand vs Afghanistan Live Score, World Cup 2023
டாஸ் வென்ற ஆப்கான் பவுலிங்; நியூஸி., முதலில் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதனால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே - வில் யங் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் 3 பவுண்டரிகளை விரட்டிய கான்வே 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வில் யங் உடன் ரச்சின் ரவீந்திரா ஜோடிசேர்ந்தார். இந்த ஜோடியில் வில் யங் 57 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அவருடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த ரச்சின் ரவீந்திரா அஸ்மத்துல்லா உமர்சாய் வீசிய 20.2 ஓவரில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் வீசிய அதே ஓவரின் கடைசிப் பந்தில் அரைசதம் விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் 54 ரன்களுக்கு அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த டேரில் மிட்செல், ரஷித் கான் வீசிய அடுத்த ஓவரின் 4வது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி நடையைக் கட்டினார். இவரையடுத்து, பேட்டிங் செய்ய க்ளென் பிலிப்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். டாம் லாதம் - க்ளென் பிலிப்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி நியூஸிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் மற்றும் டாம் லாதம் இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர்.
சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் 80 பந்துகளில் 71 ரன் எடுத்திருந்த நிலையில், நவீன் உல் ஹக் பந்தில் ரஷீத் கான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, மார்க் சாப்மேன் பேட்டிங் செய்ய வந்தார்.
நவீன் உல் ஹக்கின் அதே ஓவரில் மறுமுனையில் அரைசதம் அடித்து களத்தில் இருந்த டாம் லாதம் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இவரியடுத்து, மிட்செல் சான்ட்னர் பேட்டிங் செய்ய வந்தார்.
இறுதியில் நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன் எடுத்தது.
இதன் மூலம் 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மதுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாத்ரன் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.
ஆஃப்கானிஸ்தான் அணி 5.5 ஓவரில் 27 ரன் எடுத்திருந்தபோது, ரஹ்மதுல்லா குர்பாஸ் 11 ரன் எடுத்திருந்த நிலையில், மேட் ஹென்றி பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இவரையடுத்து, ரஹமத் ஷா பேட்டிங் செய்ய வந்தார்.
அடுத்த ஓவரில், இப்ராஹிம் ஜாத்ரன் 14 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ட்ரெண்ட் போல்ட் பந்தில் மிட்செல் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பேட்டிங் செய்ய வந்தர்.
ஹஷ்மதுல்லா ஷாஹிதி 8 ரன்கள் மட்டுமே எடுத்து, ஃபெர்குசன் பந்தில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். அடுத்து அஜ்மதுல்லா ஒமர்ஜாய் பேட்டின் செய்ய அவந்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணி 25.4 ஓவரில் 97 ரன் எடுத்திருந்தபோது, அஜ்மதுல்லா ஒமர்ஜாய் 32 பந்துகளில் 27 ரன் அடித்திருந்த நிலையில், ட்ரெண்ட் போல்ட் பந்தில் டாம் லாதம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஐக்ரம் அலிகில் பேட்டிங் செய்ய வந்தார்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினார்கள். முஹமது நபி (7 ரன்) மிட்செல் சாண்ட்னர் பந்தில் அவுட் ஆனார். ரஷீத் கான் (8 ரன்) ஃபெர்குசன் பந்தில் டேரில் மிட்செல் டம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
முஜீப் உர் ரஹ்மான் (4 ரன்) ஃபெர்குசன் பந்தில் வில் யங் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
நவின் உல் ஹக் (0) சாண்ட்னர் பந்தில் மார்க் சாப்மேன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஃபசல்லா ஃபரூக்கி (0) மிட்செல் சாண்ட்னர் பந்தில் டேரில் மிட்செல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 34.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம், நியூஸிலாந்து அணி 149 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் 71 ரன் அடித்த கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் பரிசு பெற்றார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:-
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸ்ஹல்ஹா
நியூசிலாந்து அணி இதுவரை ஆடியுள்ள தனது 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்தையும், 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும், 3வது ஆட்டத்தில் வந்தேச அணியையும் வீழ்த்தியது. அதன்மூலம் நியூசிலாந்து அணி தனது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் உள்ளது.
மறுபுறம், ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்திடமும், அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோல்வி கண்டது. ஆனால், முந்தைய ஆட்டத்தில் திடீரென எழுச்சி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.
இங்கிலாந்தை முதல்முறையாக சாய்த்த உற்சாகத்துடன் களம் இறங்கும் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட எல்லா வகையிலும் போராடும். சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணிக்கு, ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில்லை. எனவே இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 2 முறை மோதி இருக்கின்றன. அதில் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்று இருக்கிறது. நடப்பு தொடரில் சென்னையில் நடந்துள்ள 2 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி கண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.