Advertisment

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான்; டக்வொர்த் லிவிஸ் விதிப்படி வெற்றி

ரவீந்திரா, வில்லியம்சன் அதிரடியால் 401 ரன்கள் குவித்த நியூசிலாந்து; ஜமான், பாபர் அசம் அதிரடி; மழை பாதிப்பால், டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

author-image
WebDesk
New Update
 New Zealand vs Pakistan Live Score World Cup 2023 Bengaluru in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதல்

worldcup 2023 | new-zealand-vs-pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கிய  35வது லீக் போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

Advertisment

New Zealand vs Pakistan Live Score, World Cup 2023ஆங்கிலத்தில் படிக்கவும்: 

டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் - நியூசிலாந்து முதலில் பேட்டிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே -  ரச்சின் ரவீந்திரா ஜோடி களமாடினர். இந்த ஜோடி அணிக்கு மிகச்சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரின் விக்கெட்டை கைப்பற்ற பாகிஸ்தான் 10 ஓவர்களுக்கு மேல் போராடியது. இந்த  ஜோடியில் 6 பவுண்டரிகளை விரட்டிய டெவோன் கான்வே 35 ரன்னில் அவுட் ஆனார். 

இதன்பிறகு, தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா உடன்  கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதில் ரச்சின் 51 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருடன் பார்ட்னர்ஷிப்பில் இருந்த கேப்டன் வில்லியம்சன் 49 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து அதிரடி கலந்த நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 89 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் இருந்த கேப்டன் வில்லியம்சனும் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், 79 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 95 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

சதம் விளாசி களத்தில் இருந்த தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த வீரர்களில் டேரில் மிட்செல் 29 ரன்னுக்கும், மார்க் சாப்மேன் 39 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த  கிளென் பிலிப்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

2 சிக்ஸர்களை விளாசிய மிட்செல் சான்ட்னர் 26 ரன்னுடனும், டாம் லாதம் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 401 ரன்கள் குவித்தது. இதனால், பாகிஸ்தான் அணிக்கு 402 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில்  முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி, இப்திகார் அகமது மற்றும் ஹாரிஸ் ரவூப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

மழை தொடர்ந்து பெய்ததையடுத்து, ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டக்வொர்த் லிவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

402 இலக்கு - பாகிஸ்தான் பேட்டிங் 

தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 402 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் - ஃபகார் ஜமான் ஜோடி களமிறங்கினர். இதில் அப்துல்லா ஷபீக் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

தற்போது ஃபகார் ஜமான் - கேப்டன் பாபர் அசாம் ஜோடி களத்தில் விளையாடி வருகிறார்கள். அதிரடியாக விளையாடி வரும் ஃபகார் ஜமான் 63 பந்துகளில் சதம் விளாசினார். பாகிஸ்தான் அணி 21 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. 

பாகிஸ்தான் அணி 160 ரன்கள் எடுத்திருந்தப்போது, மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு, பாகிஸ்தான் அணிக்கு 342 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜமான் – பாபர் அசம் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்து வந்தனர். பாகிஸ்தான் அணி 200 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழைக் குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழை தொடர்ந்து பெய்ததையடுத்து, ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டக்வொர்த் லிவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்

நியூசிலாந்து: டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட். 

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான், பாபர் ஆஸம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), இப்திகார் அகமது, சவுத் ஷகீல், ஆகா சல்மான், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவூப். 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 4ல் வெற்றி 3ல் தோல்வி என 8 புள்ளிகளுடன், +0.484 என்ற ரன்ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி எந்த பிரச்சனையும் இல்லாமல் அரையிறுதிக்கு இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

மறுபுறம், 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய ஏற்கனவே சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், அவர்கள் அரையிறுதி வாய்ப்பில் தொடர மீதமுள்ள இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. 

இந்த இரு அணிகளுக்கும் வெற்றி மிக முக்கியம் என்பதால் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup New Zealand vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment