worldcup 2023 | New Zealand vs South Africa: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) புனேயில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 32-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: New Zealand vs South Africa Live Score, World Cup 2023
டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் - தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - கேப்டன் பவுமா ஜோடி களமிறங்கினர். இதில், ஒரு சிக்ஸர் 4 பவுண்டரியை விரட்டிய பவுமா 24 ரன்னில் அவுட் ஆனார்.
இதன்பிறகு தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் ராஸ்ஸி வான் டெர் டுசென் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ஆரம்பம் முதல் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இதில் டி காக் 62 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருடன் மறுமுனையில் இருந்த வான் டெர் டுசென் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து இந்த ஜோடி விறுவிறுப்பாக விளையாடி அதிரடியாக ரன்களை எடுத்து அணியின் ரன்ரேட்டை அதிரடியாக உயர்த்தினர். இதில், 103 பந்துகளை எதிர்கொண்ட தொடக்க வீரர் குயின்டன் டி காக் சிக்ஸரை பறக்கவிட்டு சதம் விளாசி மிரட்டினார். தென் ஆப்ரிக்கா அணி 38 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக ஆடி வந்த டி காக் 114 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனையடுத்து மில்லர் களமிறங்கி, அதிரடியாக ஆடினார். மறுமுனை சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி வந்த வான் டெர் டுசன் சதம் அடித்து அசத்தினார்.
இந்தப் பக்கம் மில்லரும் அரை சதம் விளாசினார். மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அவுட் ஆனார். பின்னர் கிளாஸன் களமிறங்கினார். வான் டெர் டுசன் 118 பந்துகளில் 133 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்ததாக மார்க்ரம் களமிறங்கினார். கிளாசன் 15 ரன்களுடன், மார்க்ரம் 6 ரன்களுடன் இருந்தப்போது தென்னாப்பிரிக்கா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் சௌதி 2 விக்கெட்களையும், போல்ட் மற்றும் நீசம் தலா ஒரு விக்கெட்டையும் விளாசினர்.
லாதம் 4 ரன்களில் வெளியேற, மிட்சல் உடன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சற்று நேரம் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருப்பினும் மிட்செல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாண்ட்னர் மற்றும் சௌதி தலா 7 ரன்கள் அடித்து அவுட் ஆகினர்.
அடுத்து வந்த நீசம் டக் அவுட் ஆனார். பின்னர் ட்ரெண்ட் போல்ட் களமிறங்கினார். சிறிது நேரம் தாக்குபிடித்த போல்ட் 9 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஹென்றி களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த பிலிப்ஸ் அரை சதம் அடித்தார். இருப்பினும் பிலிப்ஸ் 60 ரன்களில் அவுட் ஆக நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா தரப்பில் மகராஜ் 4 விக்கெட்களையும், ஜென்சன் 3 விக்கெட்களையும், ஜெரால்டு 2 விக்கெட்களையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து பேட்டிங்
நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக கான்வே மற்றும் யங் களமிறங்கினர். கான்வே 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மிட்சல் களமிறங்கினார். அதேநேரம் மறுமுனையில் ஆடிவந்த யங் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேப்டன் டாம் லாதம் களமிறங்கினார். நியூசிலாந்து அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. லாதம் 4 ரன்களில் வெளியேற, மிட்சல் உடன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சற்று நேரம் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருப்பினும் மிட்செல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாண்ட்னர் மற்றும் சௌதி தலா 7 ரன்கள் அடித்து அவுட் ஆகினர்.
அடுத்து வந்த நீசம் டக் அவுட் ஆனார். பின்னர் ட்ரெண்ட் போல்ட் களமிறங்கினார். சிறிது நேரம் தாக்குபிடித்த போல்ட் 9 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஹென்றி களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த பிலிப்ஸ் அரை சதம் அடித்தார். இருப்பினும் பிலிப்ஸ் 60 ரன்களில் அவுட் ஆக நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா தரப்பில் மகராஜ் 4 விக்கெட்களையும், ஜென்சன் 3 விக்கெட்களையும், ஜெரால்டு 2 விக்கெட்களையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி முதல் 4 ஆட்டங்களில் இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என அடுத்தடுத்து வெற்றியைப் பதிவு செய்தது. அதன் பிறகு, இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 389 ரன் இலக்கை விரட்டிய நியூசிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் நெருங்கி வந்து தோற்றது. அதனால், வலுவான நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களமிறங்கும்.
இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா 5ல் வெற்றி, ஒரு தோல்வி கண்டு, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி நெதர்லாந்திடம் 38 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி பெற்றாலும், அடுத்த போட்டிகளில் அதிரடியாக எழுச்சி பெற்றது. குறிப்பாக, கடைசி 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக வெற்றி ருசித்துள்ளது. முதுகு வலி காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத ரபடா அணிக்கு திரும்புவார். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து சர்வதேச ஒருநாள் போட்டியில் 71 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 25-ல் நியூசிலாந்தும், 41-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டங்கள் முடிவு இல்லை.
உலகக் கோப்பையில் 8 முறை மோதியதில் நியூசிலாந்து 6 ஆட்டத்திலும், தென்ஆப்பிரிக்கா 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.