/indian-express-tamil/media/media_files/0GxIdxRsDIcdN6ygrKsq.jpg)
நெய்மருக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இருக்காது என பிரேசில் அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Neymar: உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தின்போது பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் (வயது 31) பலத்த காயமடைந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.
காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவரை ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இல்லாத நிலையில் பிரேசில் அணி 2-0 என தோல்வியடைந்தது. இந்நிலையில், நெய்மர் காயமடைந்துள்ளது பிரேசில் அணிக்கு மட்டுமல்லாது அவர் விளையாடி வரும் கிளப் அணிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நெய்மர் ஏ.எஃபி.சி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான சவூதி அரேபிய கிளப் அணியான அல் ஹிலாலுக்காக விளையாட உள்ளார். இந்த தொடரில் வருகிற நவம்பர் 6 ஆம் தேதி நடக்கும் லீக் சுற்று போட்டியில் அல் ஹிலால் அணி மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற உள்ள நிலையில், நெய்மரை நேரில் காண ஏராளமான ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அவர்களை பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
இருப்பினும், அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என பிரேசில் அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். "அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். ஆனால் அவர் காயங்களால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். காயத்தில் இருந்து குணமடைந்து ஃபார்முக்கு திரும்பும்போது மீண்டும் காயமடைகிறார்" என்று அவர் கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.