களத்தில் சிவாஜி கணேசனை மிஞ்சினாரா நெய்மர்..பாரபட்சம் இல்லாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மீம்ஸ் கிரியேர்களும் தங்கள் பங்குக்கு அவரை வச்சி செய்துள்ளனர்.

பிரேசில் வீரரின் நெய்மர் களத்தில்  கீழே விழுந்து வலியால் துடித்த சம்பவம் நெட்டிசன்களுக்கு  மீம்ஸ்களை அளித்து கொடுக்கும் வகையில் உதவியுள்ளது.

சமாராவில் நடந்த இறுதி 16 ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது பிரேசில். நேற்று முன் தினம் நடைபெற்ற  ஆட்டத்தில் பிரேசில் வீரரின் நெய்மர் மெக்சிகோ வீரர்களின் தடுப்பட்டாத்தால் கீழே விழுந்து வலியால் துடித்தார். எனினும் நெய்மரின் இந்த செயல் சற்று மிகைப்படுத்தியதாக பேசப்பட்டு வருகிறது.

மெக்சிகோ வீரர் மிகுயெல் லயுன், தேவையில்லாமல் நெய்மரின் ஆபரேஷன் நடந்த கணுக்கால் மீது தன் ஷூவை தேய்த்தார் அல்லது மிதித்தார், இது ரெட் கார்டு சம்பவமாகும், இதற்கு நெய்மர் வலிகாரணமாக எதிர்வினையாற்றினார். அதே நேரத்தில் நெய்மர் வலியால் துடித்து ரொம்ப ஓவர் ரியாக்‌ஷன் போல் நெட்டிசன்களின் பேச்சுக்கு ஆளாகியுள்ளது.

நெய்மர் மீது எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு, ஏனெனில் எப்போதும் எதிரணியினர் தன்னை ஃபவுல் செய்து கொண்டேயிருக்கின்றனர் என்பதாக அவர் கொஞ்சம் கூடுதலாக வினையாற்றுவதே. ஒரு தள்ளுக்கு 16 முறை பல்ட்டி அடித்ததைப் பார்த்தோம், தன் வினைத் தன்னைச் சுடும் என்பது போல் உண்மையிலேயே வலியால் துடித்தால் கூட அது நெய்மரின் நாடகீய சேட்டை என்பது போல் உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. அதோடு மீம்ஸ் கிரியேர்களும் தங்கள் பங்குக்கு அவரை வச்சி செய்துள்ளனர்.

.

Web Title: Neymar memes viral in social media

Next Story
இந்தியாவின் பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து.. இந்திய அணி அபார வெற்றி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X