40 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டிகள் (ஏ.எஃப்.சி)இன்று முதல் தொடங்குகிறது. இந்த 40 அணிகளும் தலா நான்கு அணிகள் கொண்ட 10 குழுக்களாக பிரிக்கப்படும். மேற்கு மண்டலத்தில் உள்ள அணிகள் ஏ முதல் இ வரையிலும், கிழக்கு மண்டலத்தில் உள்ள அணிகள் எஃப் முதல் ஜே வரையிலும் குழுக்கள் பிரிக்கப்படும். ஒரே உறுப்பினர் சங்கத்தின் (MA) கிளப்புகள் ஒரே குழுவில் இணைக்கப்படாது.
மேற்கு மண்டலத்தில் அல் ஹிலால், அல் இட்டிஹாத் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் போன்ற சவுதி அரேபிய முன்னணி அணிகள் உள்ளன. அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது அல் ஐன் எஃப்சி அணியை கொண்டிருக்கிறது. கத்தாரில் இருந்து, நடப்பு சாம்பியனான அல் சத் எஸ்.சி பங்கேற்கிறது.
இந்தியன் சூப்பர் லீக்கின் (ஐஎஸ்எல்) லீக் வெற்றியாளரான மும்பை சிட்டி எஃப்சி, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றியைப் பதிவு செய்த முதல் இந்திய கிளப் என்ற பெருமையை கடந்த ஆண்டு வரலாற்றில் பதிவு செய்த பின்னர் இரண்டாவது முறையாக போட்டியில் பங்கேற்கிறது. மும்பை அணியுடன் மேற்கு மண்டலத்தில் அல் பைசாலி (ஜேஓஆர்), எஃப்சி இஸ்டிக்லோல் (TJK), ஏர் ஃபோர்ஸ் கிளப் (IRQ), மற்றும் அஹல் எஃப்சி (டிகேஎம்) உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் லீக் சுற்றைத் தொடர்ந்து, அனைத்து 10 குழு வெற்றியாளர்களும், மூன்று சிறந்த ரன்னர்-அப்களுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள், இது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற உள்ளது. இறுதிச் சுற்று போட்டிகள் முறையே மே 11 மற்றும் மே 18, 2024 ஆகிய தேதிகளில் இரண்டு பகுதிகளாக நடைபெறும்.
இந்தியாவில் விளையாடும் நெய்மர்
இந்நிலையில், பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மர் இந்திய மண்ணில் ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் தொடருக்கான போட்டியை விளையாட உள்ளார். அவர் கிளப் அணியான 'அல் ஹிலால்' இந்திய அணியான மும்பை சிட்டி இடம் பிடித்துள்ள அதே குழுவில் இடம் பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் ஆட்டம் புனேவில் நடக்கிறது. இதன்படி, நெய்மர் இந்திய மண்ணில் தனது முதல் போட்டியை விளையாட உள்ளார்.
அண்மையில் சவூதி கிளப் அணியான அல் ஹிலால் நெய்மரை 97.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. அல் ஹிலால் அணி எப்போது இந்தியாவில் விளையாடும் என்பதற்கான அட்டவணை இன்னும் தயாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.