பிரேசில் கால்பந்து அணியின் நிகழ் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நெய்மர். மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற உலகின் டாப் மோஸ்ட் கால்பந்தாட்ட ஸ்டார்களுக்கு இணையான வீரர் நெய்மர்.
ஆனால், இந்த செய்தி அவரைப் பற்றியதல்ல. அவருடைய தாயாரைப் பற்றியது.
ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போரா! - நிலைமை தெரிந்து தான் அக்தர், அப்ரிடி பேசுகிறார்களா?
நெய்மரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே. நெய்மருக்கு ஏஜென்டாகவும் உள்ளார். தாயார் நடின் கான்கேல்வ்ஸ். 52 வயதாகும் நடின் கான்கேல்வ்ஸ், கடந்த 2016-ம் ஆண்டு வாக்னருடன் உள்ள உறவை முறித்துக் கொண்டார்.
இந்நிலையில், நெய்மரின் தாயார் நடினுக்கும் 22 வயதான இளைஞர் டியாகோ ரமோஸ் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் அரவணைத்து நிற்பது போன்ற படத்தை நெய்மரின் தாயார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
data-instgrm-version="12">
இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நெய்மர் எப்படி வினையாற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, அவர் அந்த படத்திற்கு "மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தி சன் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் படி, "நெய்மர் தன் தாய் மீது அதீத அன்பு வைத்திருப்பவர். அதன் காரணமாக தனது பைசப்ஸில் தாயாரின் முகத்தை டாட்டூ வரைந்துள்ளார். நெய்மரின் சகோதரி ரஃபேலோ சாண்டோஸ்.
9 வருடங்களுக்கு முன் தோனி வியந்த 'யார்ரா இவன்' - பால் வல்தாட்டி 'தி டெஸ்டிராயர்'
இந்நிலையில், சமீபத்தில் ஈஸ்டர் ஞாயிறன்று, நெய்மர் தாய் நடின், 22 வயது இளைஞர் டியாகோவுடனான தனது உறவை, காதலை இன்ஸ்டாகிராம் வாயிலாக வெளிப்படுத்தினார். அதில், "விவரிக்க முடியாததை விளக்க முடியாது, நீங்கள் வாழ்ந்து பாருங்கள்" என்று காதல் பொங்க பதிவிட்டுள்ளார்.
நெய்மரின் தீவிர ரசிகர் தான் டியாகோ. இருவரும் இதற்கு முன்பே சந்தித்து இருக்கின்றனர்.
சரி, நெய்மர் தாயாரின் காதலன் டியாகோ என்ன செய்கிறார் என்று பார்த்தால், அவர் பிரேசில் புகழ்பெற்ற இ-ஸ்போர்ட்ஸ் வீடியோ கேம் உறுப்பினராம். அதாவது, வீடியோ கேம் விளையாடுபவர். தவிர, மாடல் என்று கூறப்படுகிறது.
data-instgrm-version="12">
நெய்மரை விட 6 வயது இளையவர் டியாகோ என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”