/tamil-ie/media/media_files/uploads/2022/05/tamil-indian-express-2022-05-20T155150.220.jpg)
India's Nikhat Zareen has won gold in the Boxing World Championships defeating Thailand's Jutamas Jitpong ,Nikhat Zareen has won the gold medal in the 52-kg category
Nikhat Zareen Tamil News: 12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த அசத்தலான வெற்றியின் மூலம் அவர் தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.
25 வயதான நிகாத் ஜரீன் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2019 ஆண்டில் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார். தற்போது உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இவர் இந்த பட்டத்தை வெல்லும் 5வது இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் நிகாத் ஜரீன். முன்னதாக மேரி கோம், சரிதா தேவி (2006), லேகா (2006), ஜென்னி (2006) ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ONE FOR THE HISTORY BOOKS ✍️ 🤩
⚔️@nikhat_zareen continues her golden streak (from Nationals 2021) & becomes the only 5️⃣th 🇮🇳woman boxer to win🥇medal at World Championships🔥
Well done, world champion!🙇🏿♂️🥳@AjaySingh_SG#ibawwchs2022#IstanbulBoxing#PunchMeinHaiDum#Boxingpic.twitter.com/wjs1mSKGVX— Boxing Federation (@BFI_official) May 19, 2022

நிகத் ஜரீனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை தட்ச்சென்ற இந்திய வீராங்கனை நிகத் ஜரீனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "நமது குத்துச்சண்டை வீரர்கள் நம்மை பெருமைப்படுத்தியுள்ளனர்! பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.