வியட்நாமைச் சேர்ந்த, இரண்டு முறை ஆசிய சாம்பியனான குத்துச் சண்டை வீராங்கணையான நிகுயென் தி டாம் உடன் மோதி 5-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நிகத் ஜரீன் வெற்றி பெற்று குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் சாதனை படைத்தார்.
2023 IBA மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் நிகுயென் தி டாம்-ஐ தோற்கடித்த பிறகு இந்தியாவின் நிகத் ஜரீன் மேடையிலேயே உற்சாகமாக கொண்டாடினார்.
புதுடெல்லி, இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மதிப்புமிக்க ஐ.பி.ஏ குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் இரண்டாவது பெண் குத்துச்சண்டை வீராங்கனையான நிகத் ஜரீன் உணர்ச்சிவசப்பட்டு சந்தோஷத்தில் முழங்காலிட்டு விழுந்து கண்ணீர் விட்டார்.
வியட்நாமைச் சேர்ந்த, இரண்டு முறை ஆசிய சாம்பியனான குத்துச் சண்டை வீராங்கணையான நிகுயென் தி டாம் உடன் மோதி 5-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நிகத் ஜரீன் வெற்றி பெற்று குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் சாதனை படைத்தார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயதான குத்துச் சண்டை வீராங்கணை, இந்த ஆண்டு போட்டிக்காக ஃப்ளை வெயிட்டில் இருந்து லைட் ஃப்ளைவெயிட்டிற்கு மாறினார். ஆனால், அந்த மாற்றம் இருந்தபோதிலும், அவர் இறுதிப் போட்டிக்கு செல்லும் வழியில் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு ஆப்பிரிக்க சாம்பியனுமான ரூமைசா பௌலாம், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற சுதாமத் ரக்சட் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியா ஆகியோரை தோற்கடித்தார்.
“இரண்டாவது முறையாக உலக சாம்பியனானதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குறிப்பாக வேறு பிரிவில். இன்றைய போட்டி முழுப் போட்டியிலும் எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது, இது இறுதிப் போட்டி என்பதால் எனது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி எல்லாவற்றையும் வளையத்தில் பயன்படுத்த விரும்பினேன். இது எங்கள் இருவருக்கும் எச்சரிக்கைகள் மற்றும் எட்டு எண்ணிக்கையுடன் ஒரு போட் ரோலர்கோஸ்டர் மற்றும் அது மிகவும் நெருக்கமாக இருந்தது. கடைசிச் சுற்றில் எனது உத்தி ஆல் அவுட் மற்றும் தாக்குதலாக இருந்தது. வெற்றியாளராக என் கை ஓங்கியபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் பதக்கம் இந்தியாவுக்கானது. போட்டி முழுவதும் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்குமானது” என்று போட்டிக்குப் பிறகு நிகத் ஜரீன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“