இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது போட்டி மழையினால் டிரா ஆனது. இதனால், தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தால் கூட தொடரை வென்று விடும். ஆனால், இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரை சமன் செய்ய முடியும்.
இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் ஸ்மித் 42 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு ரன்களுக்கு ஓடினார். அப்போது, பேர்ஸ்டோவ் பந்தை பிடித்து ஸ்டம்பை தாக்கினார். ஸ்மித் கிரீஸ்க்கு சற்று வெளியே நின்றிருந்தார். ஆனால், பெய்ல் ஸ்டம்பில் இருந்து விலகாமல் இருந்ததால் ரன்அவுட்டில் இருந்து தப்பினார். இதனால் அவுட்டில் இருந்து தப்பிய ஸ்மித், 71 ரன்கள் சேர்த்தார்.
இந்த நிலையில், இது அவுட்டா? இல்லையா? என்று சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள். ஸ்மித் அவுட் இல்லை என அறிவித்தவர் மூன்றாவது நடுவரான நிதின் மேனன் ஆவார். அவர் சிறந்த முடிவை வழங்கியதாக பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் சிலர் அவருக்கு விராட் கோலியை தவிர மற்ற எல்லாரையும் பிடிக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் கோலி நிதின் மேனனால் அவுட் அளிக்கப்பட்ட பல நிகழ்வுகள் உள்ளன. இது ஒவ்வொரு முறையும் சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. உண்மையில், மார்ச் மாதம் உள்நாட்டில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரின் 4 வது டெஸ்டின் போது டிராவிஸ் ஹெட் அப்பீல் இருந்து தப்பிய பிறகு கோலி அவரை வறுத்தெடுத்தார். பின்னர் கோலி நடுவரை நோக்கி சென்று"நான் பேட்டராக இருந்திருந்தால் அவுட் ஆகியிருப்பேன்" என்று நகைச்சுவையாக கூறினார். மேனனால் புன்னகையை அடக்க முடியவில்லை, உடனே விரலை உயர்த்தி பதிலளித்தார் கோலி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil