Advertisment

திருப்புமுனை கொடுத்த ஹர்திக், சாதனையை முறியடிப்பவர்... பஞ்சாப்பை பந்தாடிய நிதிஷ் யார்?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமாடி வரும் ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ் குமார் ரெட்டி நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளைப் பறக்கவிட்டு 64 ரன்கள் எடுத்தார்.

author-image
WebDesk
New Update
Nitish Kumar Reddy cricket journey IPL 2024 PBKS vs SRH Tamil News

2018 ஆம் ஆண்டு ஆண்டு விருது வழங்கும் விழாவில் பி.சி.சி.ஐ-யால் ‘16 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்’ பிரிவில் நிதிஷ் தேர்வு செய்யப்பட்டார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Nitish Kumar Reddy | Punjab Kings | Sunrisers Hyderabad IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை முல்லன்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

Advertisment

இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் முலம் 2 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Nitish Kumar Reddy: A record-breaker in age-group cricket, best under-16 cricketer and now an IPL star

அதிரடி சரவெடி - யார் இந்த நிதிஷ்?

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது பெற்ற அவரைப் பற்றிய தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

20 வயதான நிதிஷ் குமார் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்தவர். ஆந்திர மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமாடி வரும் அவர் நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளைப் பறக்கவிட்டு 64 ரன்கள் எடுத்தார். 

அவரது அணி சார்பில் களமாடிய வீரர்களில் 25 ரன்களுக்கு மேல் யாரும் தாண்டாத நிலையில், தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் நிதிஷ். இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கேமியோ ஆடிய அவர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அசத்தினார்.  

சாதனையை முறியடிப்பவர்

தனது பதின்ம வயதின் ஆரம்பத்தில், இந்தியாவின் பேட்டிங் மேஸ்ட்ரோ விராட் கோலியை நிதிஷ் தனது ரோல்மாடலாக எடுத்துக்கொண்டார். 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் ஆந்திராவுக்காக டாப்-ஆர்டர் பேட்டிங் ரோலில் நிதிஷ் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக, 2017-18 சீசனில் அவர் பட்டையைக் கிளப்பினார். விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் சாதனைகளை குவித்தார். நிதிஷ் 176.41 என்கிற வியக்க வைக்கும் சராசரியில் 1,237 ரன்கள் எடுத்தார். இதுவே அந்தப் போட்டியின் வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது. வியக்கத்தக்க வகையில், நாகாலாந்துக்கு எதிராக 366 பந்துகளில் 441 ரன் குவித்து 3 சதம், இரண்டு சதம், 2 அரைசதம், 441 ரன்கள் எடுத்தார்.

2018 ஆம் ஆண்டு ஆண்டு விருது வழங்கும் விழாவில் பி.சி.சி.ஐ-யால் ‘16 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்’ பிரிவில் நிதிஷ் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தனது பேட்டிங் ரோல்மாடலாக விராட் கோலியை நேரில் பார்த்தார். "பாடிகார்ட் வழிமறித்ததால் என்னால் அவரை (கோலி) சந்தித்து பேச முடியவில்லை," என்று சில ஆண்டுகளுக்குப் பிறகு நிதிஷ் குறிப்பிட்டு இருந்தார். 

புகழாரம் 

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக வெற்றிக்குப்பிறகு தனது எக்ஸ் வலைதள பதிவில் இந்திய வீரர் ஹனுமா விஹாரி, "அவரில் முதலீடு செய்யுங்கள். அவர் அடுத்த பெரிய வீரராக இருப்பார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மட்டுமல்ல. நடுத்தர வேகத்தில் பந்து வீசக்கூடிய பேட்டர் ஒரு அணிக்கு கிடைப்பது அரியது" என்றும் தனது மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரரை புகழ்ந்தார்.  

பந்துவீச்சுக்கு பழக்கப்படுத்திய பயிற்சியாளர் 

“19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் கூட அவர் என் கண்காணிப்பில் இருந்தார். அவர் சிறப்பாக விளையாடி பந்துவீச்சிலும் கவனம் செலுத்த சொல்ல முடியும் என்றாலும், அதை அப்போது அவரிடம் கேட்பது மிகவும் அதிகமாக இருந்தது. அவரை மிடில் ஆர்டருக்கு மாற்றவும், பந்துவீச்சில் அவரது கவனத்தை மேம்படுத்தவும் நாங்கள் முடிவு செய்தோம், ”என்று தற்போதைய ஆந்திர அணி பயிற்சியாளர் நிர்மல் குமார் கூறுகிறார்.

லோயர் ஆர்டரில் அவரது பேட்டிங் ரிட்டர்ன்கள் பெயரளவில் இருந்தபோதிலும், சீம் பவுலிங் ஆல்-ரவுண்டர் என்கிற அறிமுகம் அவரை 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனியர் ஆந்திரா அணியில் இடம் பெற உதவியது. 2021 முதல் அவருக்கு தொடர் வாய்ப்பு கிடைத்தது. கடந்த இரண்டு ரஞ்சி டிராபியில் நிதிஷ் தலா 25 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், கால்இறுதி முடிவில் ஆந்திராவுக்காக இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்கிற பெருமையையும் பெற்றார் 

அவரது வேகம் இன்னும் செயல்பாட்டில் இருக்கும் போது, ​​ரஞ்சி சீசனில் 350 ரன்களுக்கு மேல், பீகாருக்கு எதிரான 159 ரன்கள் உட்பட நிதிஷின் பேட்டிங் நீண்ட வடிவத்தில் வருவதைக் கண்டு பயிற்சியாளர் நிர்மல் குமார் திருப்தி அடைந்தார். "அவர் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் திறமைகளில் ஒருவர். அவரால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என சமமாக செய்ய முடியும். அவர் ஆந்திரா தரப்பில் மிகவும் திறமையான வீரர் மற்றும் சிறந்த ஆல்-ரவுண்ட் பீல்டர் மற்றும் நல்ல ஸ்லிப்-கேட்சர்.

நாங்கள் பரிந்துரைக்கும் எந்தப் பொறுப்பிற்கும் அவர் தயாராக இருக்கிறார், எந்த நிலையிலும் பேட்டிங் செய்யத் தயாராக இருக்கிறார். யார்க்கர்கள், பவுன்சர்கள் மற்றும் டெத் ஓவர்களில் அவரால் வீச முடியும். அவர் ஒரு முழு பேக்கேஜ். 

இந்த சீசனில் அவர் எப்படி கடினமான ரன்களை எடுத்தார் என்பதுதான் எனக்கு தனித்து நிற்கிறது. மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி காலிறுதியின் போது, ​​அவர் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். இதேபோல், ஆரம்ப சரிவுக்குப் பிறகு நாங்கள் அவரை 3வது இடத்தில் பேட்டிங் ஆட அனுப்பினோம். அவரும் அங்கே சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி எங்கள் இன்னிங்ஸை புதுப்பிக்க உதவினார். நாங்கள் தோற்றோம் என்றாலும், எந்த நேரத்திலும் முன்னேற அவர் தயாராக இருந்ததன் நினைவாற்றல் தனித்து நிற்கிறது,” என்று பயிற்சியாளர் நிர்மல் குமார் கூறினார். 

ஹர்திக் கொடுத்த திருப்புமுனை

பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்தியாவின் முதன்மையான ஆல்-ரவுண்டர் ஹர்திக்குடனான அந்த முக்கிய சந்திப்பு தான் தனது மகன் நிதிஷ் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தந்தை முத்யாலா வெளிப்படுத்துகிறார். தனது மகனின் கிரிக்கெட் பயணத்திற்காக விசாகப்பட்டினத்திற்கு வெளியே தனக்கு கிடைத்த வேலையை விட்டுவிட்டார்.

முத்யாலா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “அவர் (நிதிஷ்) தேசிய கிரிக்கெட் அகாடமியில் கழித்த அவரது 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் நாட்களில், ஹர்திக் பாண்டியாவிடம் பேச அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்து, அவர் தான் ஒரு ஆல்ரவுண்டராக இருக்க விரும்பினார்.

நான் உதய்பூருக்கு மாற்றப்பட்டபோது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ஹிந்தி தெரியாததால், போகலாமா வேண்டாமா என்று இரண்டு மனதாக இருந்தேன். இறுதியில், நிதிஷின் கிரிக்கெட்டினால்தான் நான்  விசாகப்பட்டினத்தில் தங்கினேன். அவர் மாநிலத்திற்காக விளையாடாவிட்டாலும், மாவட்ட கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். நிதிஷுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக அவரது பயிற்சியாளர்கள் வலியுறுத்தினர். அதனால் நான் வேலையை விட்டுவிட்டு அவரது வாழ்க்கையை வடிவமைக்க முடிவு செய்தேன், ”என்று கூறினார்.

தற்போது தந்தை - மகன் இருவரின் கஷ்டங்கள் பலனளித்துள்ளன. இந்திய அணியில் ஹர்திக்கை சந்திப்பதற்கான தனது முதல் படியை நிதிஷ் அடைந்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sunrisers Hyderabad Punjab Kings IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment