அதானிக்கு எதிராக போராட்டம்: இந்தியா-ஆஸி போட்டியில் பரபரப்பு

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது பாதுகாப்புகளை மீறி இரண்டு போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

By: Updated: November 27, 2020, 06:16:35 PM

சிட்னியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, 2 போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை போட்டி தொடங்கியபின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 2 போராட்டக்காரர்கள் சிட்னி கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைந்தபோது, பாதுகாப்பாளர்கள் அவர்களை வெளியேற்ற முயற்சித்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரை வீச வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தயாராகஇருந்தபோது, போராட்டக்காரர்களில் ஒருவர், ‘அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்காதே’ என்ற பதாகையுடன் மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்க்கு கூறிய ஆடம் கில்கிறிஸ்ட், “2 பேர் மைதானத்துக்குள் எதைப் பற்றியோ கூறிக்கொண்டு உள்ளே வந்ததை நாங்கள் பார்த்தோம். பாதுகாவலர்கள் வந்து அவரகளைப் பிடித்து வெளியேற்றும் வரை நாங்கள் காத்திருந்தோம். அந்த நேரத்தில் பாதுகாப்பில் எந்த நெருக்கடியையும் நாங்கள் காணவில்லை.” என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்தை கண்டித்து, சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் போராட்டக்காரர்களில் ஒருவரான பென் புர்டெட் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் முதல் ஆட்டத்தைப் பார்க்கும் மில்லியன் கணக்கான இந்திய வரி செலுத்துவோர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அவர்களுடைய வரியை ஒரு கோடீஸ்வரரின் சுற்றுச்சூழலை அழிக்கும் நிலக்கரி சுரங்கத்தில் தங்கள் வரிகளை ஒப்படைக்க பரிசீலித்து வருகிறது என்பதை தெரிந்துகொள்ள உரிமை உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

அதானி குயின்ஸ்லாந்து திட்டத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நாடு தழுவிய போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார். மேலும், அதானி குழுமம் முன்னோக்கி செல்வதைத் தடுக்க பலர் “அதானி திரும்பி போ” பிரச்சாரத்தை நடத்தியுள்ளனர்.

அதானி நிலக்கரிச் சுரங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள், கிரிக்கெட் மைதானத்துக்குள் பதாகையுடன் நுழைந்த காட்சியை பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த திட்டம் புவி வெப்பமாதலை அதிகரிக்கக்கூடும், மேலும், தீவுகளை இணைக்கும் பவளப் பாறைகளுக்கு அச்சுறுத்தல் என்று எதிர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே எதிர்ப்பாளர்கள் கூடி கோஷங்கள் எழுப்பினர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள காலியான விளையாட்டு மைதானங்கள் முன்பு ரசிகர்கள் முதல் முறையாக மைதானத்திற்கு திரும்பியுள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:No adani loan protesters invades india australia 1st odi at sydney

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X