சர்வதேச கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக 'பாலன் டி’ஓர் விருது' கருதப்படுகிறது. இந்நிலையில், 68-வது பாலன் டி'ஓர் விருது வழங்கும் விழா இன்று திங்கள்கிழமை மாலை பாரிஸில் உள்ள தியேட்டர் டு சாட்லெட்டில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்த ஆண்டுக்கான பாலன் டி'ஓர் விருதை பிரான்ஸ் கால்பந்தாட்ட கூட்டமைப்பு வழங்கவிருகிறது.
இந்நிலையில், முதல் முறையாக கால்பந்து ஜாம்பவான்களாக மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படாதது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கால்பந்தில் பரம போட்டியாளர்களாக வலம் வரும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை இந்த விருதை வென்றுள்ளனர்.
இந்த ஆண்டு மதிப்புமிக்க விருதை வெல்ல லியோனல் மெஸ்ஸி அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரின் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு ரியல் மாட்ரிட் மற்றும் பிரேசில் கலந்து வீரர் 'விங்கர் வினிசியஸ் ஜூனியருக்கு வழங்கப்பட உள்ளது.
தங்களது உச்சத்தில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் இருந்த போது, ஐரோப்பிய கால்பந்தின் இரண்டு சூப்பர் கிளப்புகளான பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் ஆகிய அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தினர். 2022 ஃபிஎபா உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் சமீபத்திய அதிரடி திருப்பமான ஹாட்ரிக் - கோல் உட்பட, சர்வதேச போட்டிகளை வெல்வதற்காக அவர்களின் நாடுகளுடன் அவர்கள் நடத்திய போட்டிகளும் உலகின் சிறந்ததாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
பாலன் டி’ஓர் விருது ஓர் பார்வை
கால்பந்து போட்டிகளுக்கு எந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே போல பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழாவிற்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.1956-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் இதழால் உருவாக்கப்பட்ட இந்த விருந்தானது கால்பந்து உலகில் மிகப்பெரிய விருதாக பார்க்கப்படுகிறது.
தற்போது, வரை கால் பந்தில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை அதிக முறை வென்றவர்கள் என்ற பெருமையை கால்பந்து ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தான் படைத்துள்ளனர்.
கடந்த 2003ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்ந்து பலோன் டி’ஓர் பரிந்துரையில் இருவரும் இடம்பெற்று வருகின்றனர். அதன்படி, லியோனல் மெஸ்ஸி 8 முறையும், ரொனால்டோ 5 முறையும் இந்த விருதை வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு | வெற்றியாளர் | அணிகள்
2008 | கிறிஸ்டியானோ ரொனால்டோ | மான்செஸ்டர் யுனைடெட்
2009 | லியோனல் மெஸ்ஸி | எஃப்சி பார்சிலோனா
2010 | லியோனல் மெஸ்ஸி | எஃப்சி பார்சிலோனா
2011 | லியோனல் மெஸ்ஸி | எஃப்சி பார்சிலோனா
2012 | லியோனல் மெஸ்ஸி | எஃப்சி பார்சிலோனா
2013 | கிறிஸ்டியானோ ரொனால்டோ | ரியல் மாட்ரிட்
2014 | கிறிஸ்டியானோ ரொனால்டோ | ரியல் மாட்ரிட்
2015 | லியோனல் மெஸ்ஸி | எஃப்சி பார்சிலோனா
2016 | கிறிஸ்டியானோ ரொனால்டோ | ரியல் மாட்ரிட்
2017 | கிறிஸ்டியானோ ரொனால்டோ | ரியல் மாட்ரிட்
2018 | லூகா மோட்ரிக் | ரியல் மாட்ரிட் (
2019 | லியோனல் மெஸ்ஸி | எஃப்சி பார்சிலோனா (ஏஆர்ஜி)
2021 | லியோனல் மெஸ்ஸி | பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்
2022 | கரீம் பென்சிமா | ரியல் மாட்ரிட்
2023 | லியோனல் மெஸ்ஸி | இண்டர் மியாமி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.