நார்வே செஸ் தொடரில் 3 சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகளுடன் தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார்.
நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரேன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன் ஓப்பன் பிரிவில் பங்கேற்றனர்.இந்த போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா , 2 வது சுற்றில் டிங் லிரேனிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் இன்று 3வது சுற்றில் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த சுற்றில் அவர் 5.5 புள்ளிகளுடன் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.