'மன்கட்' முறையில் ‘ரன்-அவுட்’ செய்தால் அதை அதிகாரபூர்வ ரன்-அவுட்டாக எடுத்து கொள்ளும் வகையில் சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் வரவேற்றுள்ளார்.
முன்னதாக, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஒரு சில முறை 'மன்கட்' முறையில் எதிர்முனையில் நின்றுகொண்டிருக்கும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ததால், பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்ச்கர்களும் இவரை சாடினர்.
கோலியைப் புகழ்ந்த மேக்ஸ்வெல்
கேப்டன் பதவி இன்றி களம் இறங்குவதால் விராட் கோலி இனி எதிரணிகளுக்கு அபாயகரமான வீரராக விளங்குவார் என்று பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் 27-ந்தேதி பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.
பெங்களூரு அணியின் கேப்டனாக நீண்ட காலமாக பணியாற்றிய விராட் கோலி, ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத விரக்தியில் பொறுப்பில் இருந்து விலகினார்.
ஒரு வீரராக அந்த அணியில் நீடிக்கிறார். பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
பெங்களூரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளைன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), முன்னாள் கேப்டன் கோலி குறித்து நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கேப்டன் பதவி, நிச்சயம் விராட் கோலிக்கு மிகப்பெரிய சுமையாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட பொறுப்பை கையாள்வது முடிவுக்கு வந்து விட்டது என்பது அவருக்கு தெரியும்.
அதுவே அவரது ஆட்டத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இப்போது அந்த சுமையில் இருந்து விடுபட்டு விட்டார். இது எதிரணிகளுக்கு அபாயகரமான செய்தியாக இருக்கும் என்றார்.
வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்
பங்கேற்காத தென்னாப்பிரிக்கக வீரர்கள்
ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருப்பதனால், தென் ஆப்பிரிக்காவின் முக்கிய வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகின்றனர்.
வங்காளதேச கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
இதற்கிடையே, வங்காளதேச டெஸ்ட் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரபடா, இங்கிடி, மார்கோ ஜேன்சன், மார்க்ராம், வான்டெர் துஸ்சென் ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முன்னுரிமை கொடுத்திருப்பதால் அவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை
ஜூன் கடைசியில் தொடங்க திட்டம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
சென்னையில் செஸ் ஒலிம்பியாட்: போட்டி நடத்தும் உரிமையை இந்தியா வென்றது எப்படி?
இந்த நிலையில் 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரை ஜூன் மாதம் கடைசியில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் நடத்தி முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
போட்டிக்கான இடம் மற்றும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ பபுள்) உருவாக்குவது குறித்து கொரோனா தாக்கத்தின் நிலைமையை பொறுத்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.