ODI World Cup 2023 Schedule: அக்.15 தேதி இந்தியா - பாக்,. மோதல்... முழு அட்டவணை இங்க பாருங்க!
உலகக் கோப்பை போட்டிகள் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதலுடன் தொடங்குகிறது.
உலகக் கோப்பை போட்டிகள் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதலுடன் தொடங்குகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
Advertisment
ஒருநாள் உலகக் கோப்பை: அட்டவணை வெளியீடு
இந் நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை இன்று மும்பையில் வெளியிட்டப்பட்டது. இதன்படி, உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்தை எதிர்கொள்ளும் போது 2019 இறுதிப் போட்டியுடன் மீண்டும் தொடங்குகிறது. 5 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி போட்டியை நடத்தும் இந்தியா தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அட்டவணை:
Advertisment
Advertisements
இந்தியா vs ஆஸ்திரேலியா - அக்டோபர் 8 - சென்னை
இந்தியா vs ஆப்கானிஸ்தான் - அக்டோபர் 11, டெல்லி
இந்தியா vs பாகிஸ்தான் - அக்டோபர் 15, அகமதாபாத்
இந்தியா vs வங்கதேசம் - அக்டோபர் 19, புனே
இந்தியா vs நியூசிலாந்து - அக்டோபர் 22, தர்மசாலா
இந்தியா vs இங்கிலாந்து - அக்டோபர் 29, லக்னோ
இந்தியா vs குவாலிஃபையர் - நவம்பர் 2, மும்பை
இந்தியா vs தென் ஆப்ரிக்கா - நவம்பர் 5, கொல்கத்தா
இந்தியா vs குவாலிஃபையர், நவம்பர் 11, பெங்களூரு.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது?
2023 ஒருநாள் உலக கோப்பை தொடரில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியை நேரில் பார்க்க மோடி மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை 2023: நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் போட்டிகள்
இங்கிலாந்து vs நியூசிலாந்து
இந்தியா vs பாகிஸ்தான்
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்
இறுதிப் போட்டி
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டிகள்:
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்
இந்தியா vs தகுதிச் சுற்று
ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான்
அரை இறுதிப் போட்டி.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டிகள்:
வங்கதேசம் vs குவாலிஃபையர்
பாகிஸ்தான் vs வங்கதேச
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்து vs பாகிஸ்தான்
அரை இறுதிப் போட்டி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil